search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    இந்தியாவை உலுக்கிய ரெயில் விபத்துகள்...
    X

    இந்தியாவை உலுக்கிய ரெயில் விபத்துகள்...

    • 2011-ஆம் ஆண்டு உத்தரப் பிரதேசத்தின் ஃபதேபூர் அருகே கல்கா மெயில் ரெயில் தடம் புரண்டதில் 70 பேர் உயிரிழந்தனர்.
    • 2016 -ஆம் ஆண்டு இந்தூர்-பாட்னா எக்ஸ்பிரஸ் கான்பூர், புக்ராயன் அருகே தடம் புரண்டு விபத்துக்குள்ளானதில் 150 பேர் உயிரிழந்தனர்.

    * டிசம்பர் 1964 -ஆம் ஆண்டு ஏற்பட்ட சூறாவளியில் பாம்பன்-தனுஸ்கோடி பயணிகள் ரெயில் அடித்துச் செல்லப்பட்டது. அதில் பயணம் செய்த 126-க்கும் மேற்பட்ட பயணிகள் உயிரிழந்தனர்.

    * கடந்த 1981ஆம் ஆண்டு நாட்டின் மிக மோசமான மற்றும் உலகின் இரண்டாவது பெரிய ரெயில் விபத்து பீகாரில் நடந்தது. பீகார் மாநிலம் பாலகோட்டில் வீசிய சூறாவளிக் காற்றில் சிக்கிய பயணிகள் ரெயில் பாக்மதி ஆற்றில் தடம் புரண்டு கவிழ்ந்தது. 9 பெட்டிகளுடன் பயணிகள் நெரிசலில் சென்ற ரெயிலின் 7 பெட்டிகள் பாக்மதி ஆற்றில் தடம் புரண்டு கவிழ்ந்தது. நாட்டையே உலுக்கிய இந்த கோர விபத்தில் ஏறத்தாழ 800 பேர் வரை உயிரிழந்ததாக கூறப்பட்டது.

    * 1981 ஆம் ஆண்டில் வாணியம்பாடியில் 3 பயணிகள் ரெயில்கள் ஒரே பாதையில் அடுத்தடுத்து மோதிக்கொண்ட விபத்தில் 20 பேர் உயிரிழந்தனர்.

    * 1988 ஆம் ஆண்டு ஜூலை 8 ஆம் தேதி கேரளாவில் உள்ள அஷ்டமுடி ஏரியின் மீதுள்ள பெருமான் பாலத்தில் ரெயில் தடம் புரண்டு தண்ணீரில் விழுந்ததில் 105 பேர் உயிரிழந்தனர்.

    * 1995 ஆம் ஆண்டு உத்தரபிரதேச மாநிலம் ஃபிரோசாபாத் அருகே நின்று கொண்டிருந்த காளிந்தி எக்ஸ்பிரஸ் மீது டெல்லி செல்லும் புருஷோத்தம் எக்ஸ்பிரஸ் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 358 பயணிகள் உயிரிழந்தனர்.

    * 1998 ஆம் ஆண்டு கொல்கத்தா செல்லும் ஜம்மு தாவாய்-சீல்டா எக்ஸ்பிரஸ், பஞ்சாபின் வடக்கு ரெயில்வேயின் கன்னா-லூதியானா பிரிவில் அமிர்தசரஸ் செல்லும் எல்லைப்புற கோல்டன் டெம்பிள் மெயிலின் தடம் புரண்ட 6 பெட்டிகள் மீது மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 212 பேர் உயிரிழந்தனர்.

    * 1999 ஆம் ஆண்டு அசாம் மாநிலம் கவுகாத்தியில் இருந்து 310 மைல் தொலைவில் உள்ள கைசல் அருகே இரண்டு அதிவேக ரெயில்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்தை ஏற்படுத்தியது. அப்போது இரண்டு ரெயில்களில் 2500க்கும் மேற்பட்ட பயணிகள் இருந்தனர். விபத்தில் இரண்டு ரெயில்களில் பயணித்த சுமார் 290 பேர் உயிரிழந்துள்ளனர்.

    * 2002-ஆம் ஆண்டு இந்தியாவின் அதிவேக ரெயிலான ராஜ்தானி எக்ஸ்பிரஸ் ரஃபிகஞ்ச் நிலையம் அருகே தடம் புரண்டு விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் சுமார் 140 பயணிகள் உயிரிழந்தனர்.

    * 2005- ஆம் ஆண்டு தெலுங்கானாவில் உள்ள ஒரு சிறிய ரெயில் பாலம் வெள்ளத்தால் அடித்து செல்லப்பட்டது. பாலத்தின் சேதமடைந்த பகுதி அருகே சென்றபோது டெல்டா பாஸ்ட் பாசஞ்சர் ரெயில் தடம் புரண்டு 114 பேர் இறந்தனர்.

    * 2010-ஆம் ஆண்டு மேற்கு மிட்னாபூரில் உள்ள கெமாஷூலி மற்றும் சர்திஹா அருகே மும்பை நோக்கிச் சென்ற ஹவுரா குர்லா லோக்மான்ய திலக் ஞானேஸ்வரி சூப்பர் டீலக்ஸ் எக்ஸ்பிரஸ் தடம் புரண்டது. அப்போது அவ்வழியாக வந்த சரக்கு ரெயில் மீது மோதி சுமார் 148 பேர் உயிரிழந்துள்ளனர்.

    * 2011-ஆம் ஆண்டு உத்தரப் பிரதேசத்தின் ஃபதேபூர் அருகே கல்கா மெயில் ரெயில் தடம் புரண்டதில் 70 பேர் உயிரிழந்தனர்.

    * 2016 -ஆம் ஆண்டு இந்தூர்-பாட்னா எக்ஸ்பிரஸ் கான்பூர், புக்ராயன் அருகே தடம் புரண்டு விபத்துக்குள்ளானதில் 150 பேர் உயிரிழந்தனர்.

    * 2017-ஆம் ஆண்டு தெற்கு ஆந்திராவில் ஏற்பட்ட ரெயில் விபத்தில் 41 பேர் உயிரிழந்தனர்.

    * 2018-ஆம் ஆண்டு பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸ் நகரில் நடந்த ரெயில் விபத்தில் 50க்கும் மேற்பட்டோர் பலியாகினர்.

    * 2023-ஆம் ஆண்டு ஒடிசாவில் பாலசோர் பகுதியில் நடந்த ரெயில் விபத்தில் 296 பேர் உயிரிழந்தனர்.

    * மேற்கு வங்கத்தில் இன்று நிகழ்ந்த ரெயில் விபத்தில் இதுவரை 15 பேர் உயிரிழந்துள்ளனர்.

    Next Story
    ×