search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    இறுதிச் சடங்கிற்கு பிறகு உணவை சாப்பிட்ட 40 பேருக்கு உடல்நலம் பாதிப்பு
    X

    இறுதிச் சடங்கிற்கு பிறகு உணவை சாப்பிட்ட 40 பேருக்கு உடல்நலம் பாதிப்பு

    • பெண்கள் மற்றும் குழந்தைகள் உட்பட 40 பேர் உடல் உபாதையால் பாதிப்பு.
    • உணவில் விஷம் ஏதும் கலந்துள்ளதா என்பது தொடர்பாக விசாரணை நடைபெற்று வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    சத்தீஸ்கரின் சூரஜ்பூர் மாவட்டத்தில் உள்ள கிராமத்தில் மரணத்திற்குப் பிந்தைய சடங்கிற்காக தயாரிக்கப்பட்ட உணவை சாப்பிட்ட 40 பேருக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டது.

    பாதிக்கப்பட்டவர்கள் ராமானுஜ்நகர் மேம்பாட்டுத் தொகுதிக்கு உட்பட்ட விசுன்பூர் கிராமத்தில் நேற்று காலை உணவை உட்கொண்டதாக சூரஜ்பூர் தலைமை மருத்துவ மற்றும் சுகாதார அதிகாரி மருத்துவர் ஆர்.எஸ்.சிங் தெரிவித்தார்.

    உடல்நலம் பாதிக்கப்பட்டதை அடுத்து, அவர்கள் அனைவரும் சூரஜ்பூர் மாவட்ட மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அவர்களின் உடல் நிலை தற்போது சீராக உள்ளதாகவும், மருத்துவர்களின் கண்காணிப்பில் இருப்பதாகவும் அதிகாரி தெரிவித்தார்.

    உணவு உட்கொண்ட இரண்டு, மூன்று மணி நேரத்திற்குப் பிறகு, பெண்கள் மற்றும் குழந்தைகள் உட்பட 40 பேர் உடல் உபாதையால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதைத் தொடர்ந்து அவர்கள் மாவட்ட மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.

    இந்நிலையில் இதுதொடர்பாக விசாரணை நடைபெற்று வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    Next Story
    ×