என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
இந்தியா
லெக்ரேஞ்சியன் புள்ளியை நோக்கி 9.2 லட்சம் கி.மீ. கடந்த ஆதித்தா எல்-1 - இஸ்ரோ மாஸ் அப்டேட்
- ஆதித்தயா எல்-1 விண்கலம் செப்டம்பர் 2-ம் தேதி வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது.
- லெக்ரேஞ்சியன் புள்ளியை (L1) சுற்றி, ஆதித்யா எல்-1 நிலைநிறுத்தப்பட உள்ளது.
ஆந்திர பிரதேச மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் ஏவுதளத்தில் இருந்து பி.எஸ்.எல்.வி.சி. 57 ராக்கெட் மூலம் ஆதித்தயா எல்-1 விண்கலம் செப்டம்பர் 2-ம் தேதி வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது. சூரியனுக்கு விண்கலன் அனுப்பும் திட்டம் இதுவரை இந்தியாவில் மேற்கொள்ளப்படவில்லை என்பதால் இது இந்தியாவிற்கே ஒரு புது முயற்சியாகவே உள்ளது.
பூமியிலிருந்து சுமார் 15 லட்சம் கிலோ மீட்டர் தூரத்தில், எல்-1 லெக்ரேஞ்சியன் புள்ளியை சுற்றி, ஆதித்யா எல்-1 நிலைநிறுத்தப்பட உள்ளது. இந்த புள்ளியை விண்கலம் அடைவதற்கு சுமார் 125 நாட்களுக்கும் மேல் ஆகும்.
இந்த நிலையில், ஆதித்யா எல்-1 விண்கலம் இதுவரை 9.2 லட்சம் கிலோமீட்டர் தூரத்தை வெற்றிகரமாக கடந்துள்ளதாக இஸ்ரோ அறிவித்து இருக்கிறது. மேலும் இந்த விண்கலம் புவி ஈர்ப்பு மண்டலத்திற்கு வெளியே வெற்றிகரமாக பயணித்து வருவதாகவும் இஸ்ரோ தெரிவித்து உள்ளது.