என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
இந்தியா
கேரளாவில் மீண்டும் ஒரு அதிர்ச்சி சம்பவம்- பிரியாணி சாப்பிட்ட இளம்பெண் உயிரிழப்பு
- தரமற்ற உணவால் உயிரிழந்தது தெரியவந்தால், உணவகத்தின் உரிமம் ரத்து செய்யப்படும் என அமைச்சர் எச்சரிக்கை.
- இறந்த பெண்ணின் பெற்றோர் அளித்த புகாரின் அடிப்படையில் சம்பந்தப்பட்ட உணவகத்திடம் விசாரணை நடைபெற்று வருகிறது.
கேரளா:
நாடு முழுவதும் கடந்த சில நாட்களாக பிரியாணி சாப்பிட்டவர் மரணம் என்ற செய்தி வெளியாகி அதிர்ச்சி ஏற்படுத்தி வருகிறது. மேலும் கெட்டுப்போன இறைச்சி விற்பனையும் நடைபெறுகிறது. இதனை தடுக்க அதிகாரிகள் பல்வேறு முயற்சிகள் மேற்கொண்டு வருகின்றனர்.
கேரள மாநிலம் காசர்கோட்டில் துரித உணவுக் கடை ஒன்றில் ஷவர்மா சாப்பிட்ட 16 வயது மாணவி உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில் அச்சம்பவம் மறைவதற்குள் பிரியாணி சாப்பிட்ட இளம்பெண் உயிரிழந்த சம்பவம் பேரதிர்ச்சியை அளித்துள்ளது.
ஆன்லைனில் குழிமந்தி என்ற பிரியாணி ஆர்டர் செய்து சாப்பிட்ட அஞ்சு ஸ்ரீபார்வதி(20) என்ற இளம்பெண் உடல்நலக்குறைவு ஏற்பட்டு உயிரிழந்திருக்கிறார்.
பெண்ணின் பெற்றோர் அளித்த புகாரின் அடிப்படையில் சம்பந்தப்பட்ட உணவகத்திடம் விசாரணை நடைபெற்று வருகிறது. தரமற்ற உணவால் உயிரிழந்தது தெரியவந்தால், உணவகத்தின் உரிமம் ரத்து செய்யப்படும் என அம்மாநில சுகாதாரத்துறை அமைச்சர் வீணா ஜார்ஜ் தெரிவித்துள்ளார்.