search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    வருகிற பாராளுமன்ற தேர்தலில் கேரளாவில் பா.ஜனதாசாதனை வெற்றி பெறும்- பிரதமர் மோடி நம்பிக்கை
    X

    வருகிற பாராளுமன்ற தேர்தலில் கேரளாவில் பா.ஜனதாசாதனை வெற்றி பெறும்- பிரதமர் மோடி நம்பிக்கை

    • இருவரும் ஒருவர் மற்றவரின் தவறுகளை மறைக்க வேலை செய்கிறார்கள்.
    • கேரளாவில் பா.ஜனதா தொண்டர்கள் எதிர்கொள்ளும் போராட்டங்கள், அவர்களது ஆர்வம் ஒப்பிடமுடியாதவை.

    திருவனந்தபுரம்:

    தமிழகம், கேரளா உள்ளிட்ட தென் மாநிலங்களில் கணிசமான வெற்றியை பெற வேண்டும் என்பதில் பாரதிய ஜனதா உறுதியாக உள்ளது. இதற்காக பிரதமர் நரேந்திர மோடி தமிழகம் மற்றம் கேரளத்தில் ரோடு ஷோ, பொதுக்கூட்டங்களில் பங்கேற்று பிரசாரம் செய்துள்ளார்.

    இந்த நிலையில் நேற்று நமோ ஆப் மூலம் கேரளாவில் உள்ள பா.ஜனதா பூத் கமிட்டி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களுடன் பேசினார். அப்போது மோடி கூறியதாவது:-

    இந்தியா கூட்டணியில் உள்ள காங்கிரசும், கம்யூனிஸ்டு கட்சிகளும் கேரளாவில் ஒருவரையொருவர் எதிர்த்து போராடினாலும் மற்ற மாநிலங்களில் பா.ஜனதாவை தோற்கடிக்க முயற்சிக்கின்றனர். இதனை நீங்கள் மக்களிடம் கொண்டு சென்று அவர்களது இரட்டை வேஷத்தை அம்பலப்படுத்த வேண்டும்.

    இருவரும் ஒருவர் மற்றவரின் தவறுகளை மறைக்க வேலை செய்கிறார்கள். இது கேரளாவில் விளையாடும் ஆட்டம். கேரள மக்கள் படித்தவர்கள், இதுபற்றி அவர்களுக்குத் தேர்தல் பிரசாரத்தில் நீங்கள் தெரிவிக்க வேண்டும். அவர்களது ஊழலை மறைக்க தான் இந்தியா கூட்டணி உருவாக்கப்பட்டுள்ளது. பொதுமக்களை கொள்ளையடிக்கும் மோசடிகளில் ஈடுபடுவர்கள் தப்பிக்க முடியாது. அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என நான் உறுதி அளிக்கிறேன்.

    கேரளாவில் கருவண்ணூர் வங்கி மோசடி வழக்கில் கம்யூனிஸ்டு உயர் தலைவர்கள் சம்பந்தப் பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. வழக்கில் தொடர்புடைய குற்றவாளிகள் யாரும் விடுவிக்கப்பட மாட்டார்கள். அமலாக்கத்துறையால் கைப்பற்றப்பட்ட பணம் டெபாசிட்தாரர்களுக்கு திருப்பித் தரப்படும்.

    சாவடி மட்டத்தில் வெற்றி என்பதை தாரக மந்திரமாக கொண்டு தொண்டர்கள் செயல்பட வேண்டும். கேரளாவில் பா.ஜனதா தொண்டர்கள் எதிர்கொள்ளும் போராட்டங்கள், அவர்களது ஆர்வம் ஒப்பிடமுடியாதவை. கேரள பயணத்தின் போது நான் பார்த்த ஆற்றலும் உற்சாகமும் மாநிலம் புதிய சாதனையை படைக்கும் என்பதை நம்ப வைத்துள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    Next Story
    ×