என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
இந்தியா
வயநாடு தொகுதியில் ராகுல் காந்தி போட்டியிடுவதை மறுபரிசீலனை செய்ய வேண்டும்- டி.ராஜா கோரிக்கை
- வேட்பாளரை தீர்மானிக்க ஒவ்வொரு கட்சிக்கும் உரிமை இருக்கிறது.
- ராகுல் காந்தியின் அந்தஸ்து உள்ள ஒரு தலைவரை இடதுசாரி கூட்டணிக்கு எதிராக போட்டியிடும் தொகுதியில் நிறுத்த முடியுமா? என்பதை காங்கிரஸ் சிந்திக்க வேண்டும்.
புதுடெல்லி:
பாராளுமன்ற தேர்தல் தேதி அறிவிக்கப்படாத நிலையில் பா.ஜனதா கடந்த 2-ந்தேதி 195 பேர் அடங்கிய முதல் வேட்பாளர் பட்டியலை வெளியிட்டது.
இந்த நிலையில் காங்கிரஸ் கட்சி 39 தொகுதிகளுக்கான முதல் வேட்பாளர் பட்டியலை நேற்று அறிவித்தது.
அதன்படி கேரள மாநிலம் வயநாடு தொகுதியில் ராகுல் காந்தி மீண்டும் போட்டியிடுகிறார். கடந்த பாராளுமன்ற தேர்தலில் ராகுல் காந்தி 2 தொகுதிகளில் போட்டியிட்டார். இதில் வயநாடு தொகுதியில் வெற்றி பெற்றார். அமேதியில் தோல்வி அடைந்தார். தற்போது வயநாட்டில் அவர் மீண்டும் களத்தில் குதித்துள்ளார்.
இந்த தொகுதியில் இந்திய கம்யூனிஸ்டு சார்பில் கட்சியின் பொதுச்செயலாளர் டி.ராஜாவின் மனைவி ஆனி ராஜா போட்டியிடுகிறார். தேசிய அளவில் இந்தியா கூட்டணியில் இந்திய கம்யூனிஸ்டு கட்சி இடம்பெற்று இருந்தாலும் கேரளாவில் காங்கிரஸ் கட்சியை எதிர்த்து போட்டியிடுகிறது.
இந்த நிலையில் வயநாடு தொகுதியில் ராகுல் காந்தி போட்டியிடுவதை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று இந்திய கம்யூனிஸ்டு கட்சி பொதுச்செயலாளர் டி.ராஜா வேண்டுகோள் விடுத்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது:-
நாட்டின் அரசியலமைப்பு, கூட்டாட்சி மற்றும் மதசார்பின்மை ஆகியவற்றை காப்பாற்றுவதற்காகவும், மக்களின் பிரச்சனைகளை தீர்த்து அவர்களின் முன்னேற்றத்திற்காக பாடு படுவதற்காகவும் பா.ஜனதாவை எதிர்த்து போராடி வீழ்த்துவதே இந்தியா கூட்டணியின் முதன்மை நோக்கமாகும்.
ஆனால் எல்லா மாநிலங்களிலும் இதே நிலை இல்லை. கேரளாவில் இடது ஜனநாயக கூட்டணிக்கும், காங்கிரஸ் கூட்டணிக்கும் இடையே தான் போட்டி. பா.ஜனதா எந்த ஆதாயமும் பெற அனுமதிக்க முடியாது. கடந்த முறையும் வயநாடு தொகுதியில் இந்திய கம்யூனிஸ்டு போட்டியிட்டது.
வேட்பாளரை தீர்மானிக்க ஒவ்வொரு கட்சிக்கும் உரிமை இருக்கிறது. காங்கிரஸ் முடிவு எடுக்கலாம். ஆனால் ராகுல் காந்தியின் அந்தஸ்து உள்ள ஒரு தலைவரை இடதுசாரி கூட்டணிக்கு எதிராக போட்டியிடும் தொகுதியில் நிறுத்த முடியுமா? என்பதை காங்கிரஸ் சிந்திக்க வேண்டும். வயநாடு தொகுதியில் ராகுல் காந்தி போட்டியிடுவதை மறுபரிசீலனை செய்ய வேண்டும்.
இவ்வாறு டி.ராஜா கூறி உள்ளார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்