search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    மலையாள சினிமாவில் பாலியல் தொல்லை: சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடக்கோரி நீதிமன்றத்தில் மனு
    X

    மலையாள சினிமாவில் பாலியல் தொல்லை: சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடக்கோரி நீதிமன்றத்தில் மனு

    • 6 வழக்குகள் கொச்சியிலும், ஒரு வழக்கு திருவனந்தபுரத்திலும் பதிவு செய்யப்பட்டு உள்ளது.
    • ஹோ கமிஷனின் அறிக்கை தொடர்பாக கேரள அரசு சிறப்பு புலனாய்வுக்குழு அமைத்து விசாரணை நடத்தி வருகிறது.

    கேரளாவில் மலையாள நடிகைகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை புகார்கள் குறித்து விசாரணை நடத்த மாநில அரசு நியமித்த ஓய்வு பெற்ற நீதிபதி ஹேமா கமிஷனின் விசாரணை அறிக்கை சமீபத்தில் வெளியிடப்பட்டது.

    இதைத்தொடர்ந்து நடிகர்கள் ஜெயசூர்யா, இடவேள பாபு, முகேஷ் எம்.எல்.ஏ., மணியன் பிள்ளை ராஜு உள்பட 7 பேர் மீது நடிகை பாலியல் குற்றச்சாட்டு தெரிவித்து இருந்தார். இதில் 6 வழக்குகள் கொச்சியிலும், ஒரு வழக்கு திருவனந்தபுரத்திலும் பதிவு செய்யப்பட்டு உள்ளது.

    இந்நிலையில், மலையாள திரையுலகில் நடிகைகளுக்குபாலியல் தொல்லை தரப்பட்டது தொடர்பாக சி.பி.ஐ. விசாரிக்கக்கோரி கேரள உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

    ஹேமா கமிட்டி அறிக்கையை கடந்த 5 ஆண்டுகளாக அரசு கிடப்பில் போட்டுள்ளதாக சுட்டிக்காட்டிய மனுதாரர்களான வழக்கறிஞர்கள் இருவர், அந்த அறிக்கையை வெளியிடாமல் வைத்திருப்பது மற்றும் தனியுரிமை என்ற போர்வையில் எந்த சட்ட நடவடிக்கையும் எடுக்காதது என்ற வாதம் ஏற்றுக்கொள்ள முடியாதது.

    அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள குற்றங்கள் மற்றும் ஹேமா கமிட்டி அறிக்கையின் திருத்தப்பட்ட பக்கங்களில் ஏதேனும் இருந்தால் வெளிப்படுத்தப்பட்ட குற்றங்கள் தொடர்பான விசாரணைகளை நடத்த சிறப்பு நீதிமன்றத்தை அமைக்க வேண்டும் என்று அவர்கள் கோரியுள்ளனர்.

    ஏற்கனவே ஹோ கமிஷனின் அறிக்கை தொடர்பாக கேரள அரசு சிறப்பு புலனாய்வுக்குழு அமைத்து விசாரணை நடத்தி வரும் நிலையில், சி.பி.ஐ. விசாரணை கோரி மனுத்தாகக்ல் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

    ஹேமா கமிஷனின் அறிக்கை மலையாள திரையுலகில் மட்டுமல்லாது, தமிழ், தெலுங்கு உள்ளிட்ட திரையுலகில் பாலியல் வன்கொடுமை தொடர்பான குற்றச்சாட்டுகள் குறித்து நடிகைகள் தங்களது ஆதங்களை தெரிவித்து வருகின்றனர்.

    Next Story
    ×