என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
இந்தியா
சித்தூர் அருகே காட்டு யானை மிதித்து கணவன், மனைவி பலி- அமைச்சர் ரோஜா நேரில் சென்று ஆறுதல்
- ஒற்றை யானை கணவன், மனைவியை மிதித்து கொன்றது.
- விவசாய நிலங்களுக்கு யானைகள் வருவதால் அப்பகுதி மக்கள் அச்சமடைகின்றனர்.
சித்தூர்:
சித்தூர் மாவட்டம், குடிபாலா மண்டலம் ராமாபுரம் பகுதியை சேர்ந்தவர் வெங்கடேஷ் (வயது 40). விவசாயி. இவரது மனைவி செல்வி.
இவர்களுக்கு வனப்பகுதியொட்டி சொந்தமாக விவசாய நிலம் உள்ளது. இன்று காலை வெங்கடேசும், செல்வியும் விவசாய பணியில் ஈடுபட நிலத்திற்கு சென்றனர்.
அப்போது விவசாய நிலத்திற்கு ஒற்றை காட்டு யானை வந்தது. இதனைக் கண்டவுடன் கணவன், மனைவி கூச்சலிட்டபடி அலறி அடித்துக் கொண்டு ஓடினர்.
அவர்களை விடாமல் துரத்தி சென்று ஒற்றை யானை கணவன், மனைவியை மிதித்து கொன்றது.
இது குறித்து சித்தூர் மேற்கு போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் வெங்கடேஷ், செல்வி உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சித்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
யானை மிதித்து கணவன், மனைவி இறந்த தகவல் அறிந்து அமைச்சர் ரோஜா சம்பவ இடத்திற்கு சென்று உறவினர்களுக்கு ஆறுதல் கூறினார்.
இந்த பகுதியில் கவுண்டன்யா யானைகள் சரணாலயம் உள்ளதால் அடிக்கடி விவசாய நிலத்திற்கு யானைகள் வந்து நிலங்களை சேதப்படுத்துகிறது.
விவசாய நிலங்களுக்கு யானைகள் வருவதால் அப்பகுதி மக்கள் அச்சமடைகின்றனர். இதனால் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் வலியுறுத்தி உள்ளனர்.