search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    திருப்பதி ஏழுமலையான் சன்னதியில் சந்திராயன்-3 மாதிரியை வைத்து இஸ்ரோ விஞ்ஞானிகள் வழிபாடு
    X

    திருப்பதி ஏழுமலையான் சன்னதியில் சந்திராயன்-3 மாதிரியை வைத்து இஸ்ரோ விஞ்ஞானிகள் வழிபாடு

    • ஸ்ரீஹரிகோட்டா சதீஷ் தவாண் விண்வெளி மையத்தில் இருந்து சந்திரயான்-3 விண்கலம் விண்ணில் ஏவப்பட உள்ளது.
    • சந்திரயான்-3 சிறிய மாதிரியை ஏழுமலையான் சன்னதியில் வைத்து வழிபாடு நடத்தினர்.

    திருப்பதி:

    இந்திய விண்வெளி ஆராய்ச்சி துறையின் புதிய சாதனையாக சந்திரயான்-3 விண்கலம் நாளை பிற்பகல் 2.35 மணியளவில் விண்ணில் செலுத்தப்பட உள்ளது.

    ஆந்திராவின் ஸ்ரீஹரிகோட்டா சதீஷ் தவாண் விண்வெளி மையத்தில் இருந்து சந்திரயான்-3 விண்கலம் விண்ணில் ஏவப்பட உள்ளது.

    திருப்பதி ஏழுமலையான் கோவிலில் விண்ணில் செலுத்தப்படும் சந்திரயான்-3 விண்கலம் வெற்றி பெற இஸ்ரோ விஞ்ஞானிகள் இன்று காலை சாமி தரிசனம் செய்தனர்.

    அப்போது சந்திரயான்-3 சிறிய மாதிரியை ஏழுமலையான் சன்னதியில் வைத்து வழிபாடு நடத்தினர்.

    சந்திரயான்-3 நிலவின் மேற்பரப்பில் வெற்றிகரமாக தரையிறங்கிய பிறகு, ஆறு சக்கரங்களைக் கொண்ட ரோவர் வெளியே வந்து சந்திரனில் அது பணி செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    சந்திரயான்-3 விண்கலத்தின் மூலமாக, நிலவின் மேற்பரப்பில் விண்கலத்தை தரையிறக்கும் 4-வது நாடு என்ற பெருமையை நமது நாடு பெறும் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

    Next Story
    ×