என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
இந்தியா
எம்.பி.க்களுடன் நிதிஷ்குமார் மீண்டும் ஆலோசனை
- தெலுங்குதேசம், ஐக்கிய ஜனதாதளம் தாங்கள் விரும்பிய இலாக்காக்களை கேட்டும், சில நிபந்தனைகள் விதிப்பதாகவும் கூறப்படுகிறது.
- டெல்லியில் உள்ள நிதிஷ்குமார் இல்லத்தில் ஆலோசனை நடைபெறுகிறது.
புதுடெல்லி:
மத்தியில் புதிய அரசு அமைய பெரும்பான்மை இல்லாததால் தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகளின் ஆதரவுடன் நரேந்திர மோடி ஆட்சி அமைக்க உள்ளார். இதற்கான ஏற்பாடுகள் ஒரு புறம் நடைபெற்று வரும் நிலையில், தேசிய ஜனநாயக கூட்டணியில் முக்கிய கட்சிகளாக கருதப்படும் தெலுங்குதேசம், ஐக்கிய ஜனதாதளம் தாங்கள் விரும்பிய இலாக்காக்களை கேட்டும், சில நிபந்தனைகள் விதிப்பதாகவும் கூறப்படுகிறது.
இதனிடையே, பாரதிய ஜனதா உள்ளிட்ட தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகளின் புதிய எம்.பி.க்கள் கூட்டம் டெல்லியில் இன்னும் சற்று நேரத்தில் நடைபெற உள்ளது.
இந்நிலையில், ஐக்கிய ஜனதாதள தலைவர் நிதிஷ்குமார் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள எம்.பி.க்களுடன் ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார். டெல்லியில் உள்ள நிதிஷ்குமார் இல்லத்தில் நடைபெறும் ஆலோசனையில், தாங்கள் விரும்பிய இலாக்காக்களை கேட்டு பெறுவது, நிபந்தனைகள் தொடர்பாக ஆலோசிக்கப்படுகிறது.