search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    அக்னிபாத் திட்டத்துக்கு எதிர்ப்பு: பீகாரில் இன்று முழு அடைப்பு- லாலு கட்சி ஆதரவு
    X

    அக்னிபாத் திட்டத்துக்கு எதிர்ப்பு: பீகாரில் இன்று முழு அடைப்பு- லாலு கட்சி ஆதரவு

    • வன்முறையால் 12 ரெயில்கள் தீ வைக்கப்பட்டுள்ளன.
    • அகில இந்தி மாணவர்கள் அமைப்பு 24 மணி நேர பந்துக்கு அழைப்பு விடுத்துள்ளது.

    பாட்னா:

    ராணுவத்தில் 4 ஆண்டுகள் மட்டுமே பணிபுரியும் வகையில் ஒப்பந்த அடிப்படையிலான 'அக்னிபாத்' என்ற புதிய திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து வட மாநிலங்களில் நடந்த போராட்டம் வன்முறையானது.

    குறிப்பாக பீகார் மாநிலத்தில்தான் இளைஞர்கள் அதிகளவில் வன்முறையில் ஈடுபட்டுள்ளனர். பல்வேறு மாநிலங்களில் நடைபெற்ற வன்முறையால் 12 ரெயில்கள் தீ வைக்கப்பட்டுள்ளன.

    இந்த நிலையில் அக்னிபாத் திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து பீகாரில் முழு அடைப்புக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. அகில இந்தி மாணவர்கள் அமைப்பு 24 மணி நேர பந்துக்கு அழைப்பு விடுத்துள்ளது.

    லாலு பிரசாத் யாதவின் ராஷ்டிரிய ஜனதாதளம் கட்சி இந்த முழு அடைப்புக்கு ஆதரவு தெரிவித்துள்ளது.

    இதை அந்த கட்சியின் பீகார் மாநில தலைவர் ஜெகதானந்த் சிங் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறும்போது, 'ராணுவத்தில் குறுகியகால ஆள் சேர்ப்பு திட்டம் நாட்டின் இளைஞர்களின் நலன்களுக்கு எதிரானது. இந்த திட்டத்துக்கு எதிராக தெருக்களில் போராட்டம் நடத்துபவர்களை நாங்கள் ஆதரிக்கிறோம்.

    லோக் ஜனசக்தி கட்சி தலைவர் சூரக் பஸ்வான் கூறும்போது, கட்சி நிர்வாகிகள், தொண்டர்களுடன் சென்று இன்று கவர்னரை சந்தித்து அன்கினிபத் திட்டத்தை திரும்ப பெற கோரி மனு கொடுக்க உள்ளோம். அக்னிபத் திட்டம் நாட்டில் வேலையில்லா திண்டாட்டத்தை அதிகரிக்கும். இது இளைஞர்கள் மத்தியில் அதிருப்தியை அதிகரிக்கும் என்றார்.

    Next Story
    ×