என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
இந்தியா
சைபர் குற்றங்களை தடுக்க 20 லட்சம் செல்போன் இணைப்புகளை முடக்க உத்தரவு
- 28,200 செல்போன்களை சைபர் குற்றங்களை மேற்கொள்ள பயன்படுத்தப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது.
- 20 லட்சம் செல்போன் இணைப்புகளையும் உடனடியாக மறு ஆய்வு செய்து, அதில் போலியானவை என கண்டறியப்படும் இணைப்புகளை துண்டிக்குமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டு உள்ளது.
புதுடெல்லி:
சைபர் கிரைம் மற்றும் நிதி மோசடி போன்ற சமூக விரோத செயல்களுக்கு தெலைத்தொடர்பு வசதிகளை தவறாக பயன்படுத்துவது அதிகரித்து வருகிறது.
எனவே இதற்கு எதிராக மத்திய உள்துறை அமைச்சகமும், மாநில போலீசாரும் இணைந்து கூட்டு ஆய்வு நடவடிக்கைகளை நடத்தினர்.
இதில் 28,200 செல்போன்களை சைபர் குற்றங்களை மேற்கொள்ள பயன்படுத்தப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது. இது தொடர்பாக தொலைத்தொடர்பு துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
இந்த துறையினர் இது குறித்து தீவிரமாக ஆய்வு செய்ததில் இந்த செல்போன்கள் மூலம் 20 லட்சம் செல்போன் எண்களை பயன்படுத்தி மேற்படி குற்றங்கள் மற்றும் மோசடி அரங்கேறியது உறுதி செய்யப்பட்டது. இந்த எண்கள் மற்றும் செல்போன்கள் நாடு முழுவதும் பயன்பாட்டில் இருந்தவை ஆகும்.
இதைத்தொடர்ந்து இந்த 28,200 செல்போன்களை உடனடியாக முடக்குமாறு தொலைத்தொடர்பு துறைக்கு மத்திய தொலைத்தொடர்பு துறை அதிரடியாக உத்தரவிட்டு உள்ளது.
மேலும் மேற்படி 20 லட்சம் செல்போன் இணைப்புகளையும் உடனடியாக மறு ஆய்வு செய்து, அதில் போலியானவை என கண்டறியப்படும் இணைப்புகளை துண்டிக்குமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டு உள்ளது.
பொது பாதுகாப்பு, தொலைத்தொடர்பு உள்கட்டமைப்பின் உண்மைத்தன்மையை உறுதி செய்தல் மற்றும் பாதுகாப்பான டிஜிட்டல் சூழலை உறுதி செய்யும் நோக்கில் மத்திய உள்துறை அமைச்சகம், தொலைத்தொடர்பு துறை மற்றும் மாநில போலீசார் இணைந்து இந்த ஒருங்கிணைந்த நடவடிக்கையை மேற்கொண்டதாக மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்தன.
குறிப்பாக மோசடி நபர்களின் நெட்வொர்க்கை கூண்டோடு அகற்றுவதையும், டிஜிட்டல் அச்சுறுத்தல்களில் இருந்து குடிமக்களைப் பாதுகாப்பதையும் நோக்கமாக கொண்டு இந்த கூட்டு முயற்சி மேற்கொள்ளப்பட்டதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.