search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    துருக்கி, சிரியாவுக்கு உதவிக்கரம்- பிரதமர் மோடி உறுதி
    X

    துருக்கி, சிரியாவுக்கு உதவிக்கரம்- பிரதமர் மோடி உறுதி

    • ஆயிரக்கணக்கானோர் இன்னும் இடிபாடுகளுக்குள் சிக்கியிருப்பதால் பலி எண்ணிக்கை மேலும் உயர வாய்ப்புள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.
    • நிலநடுக்கத்தில் கடினமான நேரத்தில் உதவி மற்றும் ஆதரவை வழங்க உறுதியுடன் இருக்கிறோம் என்றும் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

    தெற்கு துருக்கி மற்றும் வடக்கு சிரியாவில் இன்று அதிகாலை 7.8 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இதில், நூற்றுக்கணக்கான கட்டிடங்கள் இடிந்து தரைமட்டமானது. இந்த இடிபாடுகளில் சிக்கி இதுவரை உயிரிழந்தோரின் எண்ணிக்கை 1300ஆக உயர்ந்துள்ளது.

    ஆயிரக்கணக்கானோர் இன்னும் இடிபாடுகளுக்குள் சிக்கியிருப்பதால் பலி எண்ணிக்கை மேலும் உயர வாய்ப்புள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

    இந்நிலையில், திருக்கி, சிரியாவில் நிலநடுக்கத்தால் ஏற்பட்ட உயிரிழப்புகள் மற்றும் பேரழிவுகளுக்கு பிரதமர் நரேந்திர மோடி ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து பிரதமர் மோடி தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது:-

    துருக்கியில் ஏற்பட்ட நிலநடுக்கம் சிரியாவையும் பாதித்துள்ளது என்பதை அறிந்து மிகவும் வேதனை அடைந்தேன். உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன். சிரியா மக்களின் துயரத்தில் பங்கு கொள்கிறோம். இந்த கடினமான நேரத்தில் உதவி மற்றும் ஆதரவை வழங்க உறுதியுடன் இருக்கிறோம்.

    இவ்வறு அவர் குறிப்பிட்டிருந்தார்.

    Next Story
    ×