என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
இந்தியா
டெல்லியில் மெகா தேசிய பழங்குடியின திருவிழாவை தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி
- மேஜர் தியான் சந்த் தேசிய அரங்கத்தில் ஆதி மகோத்சவம் என்ற பெயரிலான மெகா தேசிய பழங்குடியின திருவிழா நடைபெறுகிறது.
- மகோத்சவத்தில் ஆயிரக்கணக்கான பழங்குடியின கலைஞர்கள் பங்கு கொள்கின்றனர்.
பழங்குடியினரின் கலாச்சாரத்தை பெரிய அளவில் மதிப்பளிக்கும் வகையில், 'ஆதி மஹோத்சவ்' என்ற மெகா தேசிய பழங்குடி விழாவை பிரதமர் மோடி இன்று தொடங்கி வைத்தார்.
நாட்டின் வளர்ச்சி மற்றும் முன்னேற்றத்தில் பங்காற்றிய பழங்குடி மக்களுக்கு மதிப்பளிக்கும் வகையில், அவர்களது நலன்களுக்கான நடவடிக்கைகளை பிரதமர் மோடி முன்னின்று மேற்கொண்டு வருகிறார். இதன்படி, பழங்குடியினத்தின் கலாசாரங்களை தேசிய அளவில் காட்சிப்படுத்தும் முயற்சியாக, டெல்லியில் உள்ள மேஜர் தியான் சந்த் தேசிய அரங்கத்தில் ஆதி மகோத்சவம் என்ற பெயரிலான மெகா தேசிய பழங்குடியின திருவிழா நடைபெறுகிறது.
இந்நிகழ்ச்சியில் பழங்குடி கலாசாரம், கைவினை பொருட்கள், உணவு பொருட்கள், வர்த்தகம் மற்றும் பாரம்பரிய கலை ஆகியவை காட்சிப்படுத்தப்பட உள்ளன. இந்நிகழ்ச்சியானது மத்திய பழங்குடியின விவகாரங்களுக்கான அமைச்சகம் சார்பில் இன்று தொடங்கி பிப்ரவரி 27ம் தேதி வரை நடத்தப்படுகிறது.
நிகழ்ச்சியில் 200 ஸ்டால்கள் அமைக்கப்படுகிறது. இந்த மகோத்சவத்தில் ஆயிரக்கணக்கான பழங்குடியின கலைஞர்கள் பங்கு கொள்கின்றனர்.