search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    மேற்கு வங்க ரெயில் விபத்தில் 5 பேர் உயிரிழப்பு- விபத்து தொடர்பான விவரங்களை பெற உதவி எண்கள் அறிவிப்பு
    X

    மேற்கு வங்க ரெயில் விபத்தில் 5 பேர் உயிரிழப்பு- விபத்து தொடர்பான விவரங்களை பெற உதவி எண்கள் அறிவிப்பு

    • வடகிழக்கு மண்டலத்தில் நிகழ்ந்த துரதிர்ஷ்டவசமான விபத்து.
    • தேசிய மற்றும் மாநில மீட்பு படையினர் இணைந்து மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

    மேற்குவங்க மாநிலம் டார்ஜிலிங் மாவட்டத்தில் நின்றுகொண்டிருந்த விரைவு ரெயில் மீது சரக்கு ரெயில் மோதி விபத்துக்குள்ளானது. சரக்கு ரெயில் மோதியதில் பயணிகள் ரெயிலின் கடைசிப் பெட்டி தூக்கி வீசப்பட்டதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

    இதனிடையே ரெயில் விபத்தில் பலர் படுகாயம் அடைந்ததாக கூறப்பட்ட நிலையில் 5 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் படுகாயமடைந்த 25 பேர் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

    விபத்து நடந்த பகுதியில் மீட்பு பணியில் ஈடுபட்ட டார்ஜிலிங் காவல்துறையின் கூடுதல் எஸ்.பி. அபிஷேக் ராய் கூறுகையில், கஞ்சன்ஜங்கா எக்ஸ்பிரஸ் மீது சரக்கு ரெயில் மோதியதில் விபத்து நிகழ்ந்துள்ளது. விபத்தில் 5 பயணிகள் இறந்துள்ளனர். 25 பேர் காயமடைந்துள்ளனர். நிலைமை மோசமாக உள்ளது என்றார்.

    இதனிடையே ரெயில் விபத்து குறித்து அறிந்த மத்திய ரெயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் எக்ஸ் தள பக்கத்தில்

    கூறியிருப்பதாவது:- "வடகிழக்கு மண்டலத்தில் நிகழ்ந்த துரதிர்ஷ்டவசமான விபத்து. மீட்புப் பணிகள் போர்க்கால அடிப்படையில் நடந்து வருகிறது. ரெயில்வே, தேசிய மற்றும் மாநில மீட்பு படையினர் இணைந்து மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். காயமடைந்தவர்கள் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். உயர் அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு வந்துள்ளனர்" என்றார்.



    ரெயில் விபத்தில் சிக்கியவர்கள் தொடர்பாக அறிய 033 2350 8794, 033 2383 3326 என்ற உதவி எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

    Next Story
    ×