என் மலர்
இந்தியா

காதலனை கட்டிப்போட்டு இளம்பெண் பலாத்காரம்- 2 வாலிபர்கள் கைது
- சம்பவம் குறித்து இளம்பெண் ஸ்ரீஹரிகோட்டா போலீசில் புகார் செய்தார்.
- போலீசார் வழக்கு பதிவு செய்து இளம்பெண்ணை பலாத்காரம் செய்த 2 வாலிபர்களையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருப்பதி:
ஆந்திர மாநிலம், திருப்பதி மாவட்டம் ஸ்ரீஹரிகோட்டா போலீஸ் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியை சேர்ந்தவர் 20 வயது இளம்பெண். இவர் அதே பகுதியை சேர்ந்த வாலிபர் ஒருவரை காதலித்து வந்தார்.
இந்த நிலையில் இளம்பெண்ணுக்கு பிறந்தநாள் என்பதால் அவரது காதலன் காதலியை கோவிலுக்கு அழைத்துச் சென்றார்.
பின்னர் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள பிலிகாட் ஏரியில் காதலியை மறைவான இடத்திற்கு அழைத்துச் சென்றார். அப்போது அங்கு மதுபோதையில் இருந்த 2 வாலிபர்கள் அங்கு வந்தனர். இளம்பெண்ணின் காதலனை தாக்கி கை கால்களை கட்டி போட்டனர்.
இதனைக் கண்ட இளம்பெண் கத்தி கூச்சலிட்டார். அப்பபகுதியில் யாரும் இல்லாததால் இளம்பெண்ணை காப்பாற்ற யாரும் வரவில்லை.
பின்னர் 2 வாலிபர்களும் காதலன் கண்முன்னே அவரது காதலியை பலாத்காரம் செய்தனர்.
இதனை தடுக்க முடியாமல் காதலன் கடும் வேதனை அடைந்தார். வாலிபர்கள் 2 பேரும் அங்கிருந்து தப்பிச் சென்றனர். இதுகுறித்து இளம்பெண் ஸ்ரீஹரிகோட்டா போலீசில் புகார் செய்தார்.
போலீசார் வழக்கு பதிவு செய்து இளம்பெண்ணை பலாத்காரம் செய்த 2 வாலிபர்களையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.






