என் மலர்
இந்தியா

கடனுக்கு பரோட்டா கொடுக்காததால் ஓட்டல் உணவில் சேற்றை ஊற்றிய வாலிபர் கைது
- பணம் தர மறுத்து ஓட்டல் உரிமையாளரிடம் தகராறு செய்துள்ளார்.
- ஓட்டல் உரிமையாளரை தாக்கி தகாத வார்த்தைகளால் திட்டி உள்ளார்.
திருவனந்தபுரம்:
கேரள மாநிலம் கொல்லம் எழுகோன் பகுதியில் செயல்பட்டு வரும் ஒரு ஓட்டலுக்கு ஆனந்த் என்ற வாலிபர் சென்றார். அவர் 10 பரோட்டா பார்சல் கேட்டுள்ளார். அதனை ஓட்டல் ஊழியர் கொடுத்து அதற்கான பணத்தை கேட்டுள்ளார். ஆனால் பணம் தர மறுத்து ஓட்டல் உரிமையாளரிடம் தகராறு செய்துள்ளார். மேலும் ஓட்டலில் சமைக்க வைத்திருந்த உணவு பொருளில் சாலையில் கிடந்த சேற்றை எடுத்து ஊற்றினார். அதுமட்டுமின்றி ஓட்டல் உரிமையாளரை தாக்கி தகாத வார்த்தைகளால் திட்டி உள்ளார்.
இது குறித்து அந்த ஓட்டலின் உரிமையாளர் போலீசில் புகார் செய்துள்ளார். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிந்து ஆனந்த்தை கைது செய்தனர்.
Next Story






