என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
இந்தியா
இளம்பெண் கொடூரக் கொலை: வீட்டு அலமாரியில் உடல் கண்டெடுப்பு
- உடலை கைப்பற்றிய போலீசார் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தினர்.
- ருக்ஷாவை கொலை செய்து உடலை அலமாரியில் வீசி சென்றிருக்கலாம் என அவரது தந்தை போலீசாரிடம் புகார் அளித்தார்.
புதுடெல்லி:
தென்மேற்கு டெல்லியில் துவாராகாவின் ராஜபுரி பகுதியை சேர்ந்தவர் முஸ்தகின்.
இவர் அப்பகுதியில் உள்ள டப்ரி போலீஸ் நிலையத்தில் நேற்று முன்தினம் ஒரு புகார் அளித்தார். அதில், தனது மகள் ருக்ஷாரை (வயது26). கடந்த சில நாட்களாக தொடர்பு கொள்ள முடியவில்லை. அவர் தங்கி இருந்த வீடு பூட்டப்பட்டுள்ளது. மாயமான எனது மகளை கண்டுபிடித்து தர வேண்டும் என கூறியிருந்தார்.
புகாரின் பேரில் போலீசார் ருக்ஷா தங்கியிருந்த வீட்டுக்கு சென்றனர். பிளாட்டுக்குள் நுழைந்து போலீசார் பல்வேறு இடங்களில் தேடிய போது ருக்ஷார் கொலை செய்யப்பட்டதும், அவரது உடல் அலமாரியில் வீசப்பட்டதும் தெரியவந்தது.
அவரது உடல் முழுவதும் காயங்கள் இருந்தன. கழுத்தை கத்தியால் நெரித்து கொலை செய்யப்பட்டிருப்பதும் தெரியவந்தது. மேலும் வீடு முழுவதும் பொருட்கள் சிதறி கிடந்தன. அவரது உடல் கதவு அருகே உள்ள அலமாரியில் அமர்ந்த நிலையில் பிணமாக கண்டெடுக்கப்பட்டதாக துணை போலீஸ் கமிஷனர் அங்கித்சிங் கூறினார்.
இதைத்தொடர்ந்து உடலை கைப்பற்றிய போலீசார் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தினர்.
ருக்ஷார், குஜராத்தின் சூரத் பகுதியை பூர்வீகமாக கொண்ட விபால் டெய்லர் என்ற வாலிபருடன் கடந்த 1½ மாதங்களாக அந்த வீட்டில் தனியாக வசித்து வந்துள்ளார். இருவரும் அந்த வீட்டில் திருமணம் செய்யாமல் வசித்து வந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு ருக்ஷார் அவரது தந்தைக்கு போன் செய்துள்ளார்.
அப்போது தனது நண்பரான விபால் டெய்லர் தன்னை அடித்து துன்புறுத்துவதாகவும் கூறியுள்ளாராம். எனவே அவர் ருக்ஷாவை கொலை செய்து உடலை அலமாரியில் வீசி சென்றிருக்கலாம் என அவரது தந்தை போலீசாரிடம் புகார் அளித்தார். அதன் பேரில், கொலை வழக்குப் பதிவு செய்த போலீசார் விபால் டெய்லரை தேடி வருகின்றனர்.