search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    9 ஆம் வகுப்பு ஃபெயிலான தேஜஸ்வி யாதவ்.. இதற்கு கூட வித்தியாசம் தெரியாது - விளாசிய பிரசாந்த் கிஷோர்
    X

    '9 ஆம் வகுப்பு ஃபெயிலான தேஜஸ்வி யாதவ்.. இதற்கு கூட வித்தியாசம் தெரியாது' - விளாசிய பிரசாந்த் கிஷோர்

    • அவருக்கு ஜிடிபி என்பதற்கும் ஜிடிபி வளர்ச்சி என்பதற்கும் கூட வித்தியாசம் தெரியாது.
    • 9 ஆம் வகுப்பு ஃபெயில் ஆன ஒருவர் பீகாரின் வளர்ச்சிக்கான பாதையைக் காட்டுகிறாராம்.

    தேர்தல் வியூக நிபுணராக இருந்த பிரசாந்த் கிஷோர் புதிதாகத் தொடங்கியுள்ள ஜன் சுராஜ் கட்சி அடுத்த வருடம் நடக்கும் பீகார் சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட உள்ளது. இந்நிலையில் பீகாரில் உள்ள போஜ்பூரில் நடந்த பொதுக்கூட்டத்தில் பேசிய பிரசாந்த் கிஷோர் ராஷ்டிரிய ஜனதா தளத்தைச் சேர்ந்த தேஜஸ்வி யாதவை 9 ஆம் வகுப்பு ஃபெயில் ஆனவர் என்று சுட்டிக்காட்டி கடுமையாக விமர்சித்துள்ளார்.

    'வசதிகள் இல்லாததால் சிலர் படிக்க முடியாமல் இருப்பதை ஏற்றுக்கொள்ள முடியும். ஆனால் முதலமைச்சரின் மகனாக இருந்துகொண்டு 10 ஆம் வகுப்பை கூட தாண்ட முடியாமல் ஒருவர் இருந்தால் அது கல்வி குறித்த அவரின் கண்ணோட்டத்தையே உணர்த்துகிறது. 9 ஆம் வகுப்பு ஃபெயில் ஆன ஒருவர் பீகாரின் வளர்ச்சிக்கான பாதையைக் காட்டுகிறாராம்.

    அவருக்கு [தேஜஸ்வி யதாவுக்கு] ஜிடிபி என்பதற்கும் ஜிடிபி வளர்ச்சி என்பதற்கும் கூட வித்தியாசம் தெரியாது. அப்படி இருக்கும்போது, பீகார் வளரும் என்று அவர் எப்படிச் சொல்ல முடியும். பீகார் முதல்வராகத் தனது தந்தை லாலு பிரசாத் சம்பாதித்த புகழைச் சார்ந்தே தேஜஸ்வி இருக்கிறார். அவர் மெரிட்டில் வந்த தலைவர் கிடையது. 10 நாட்களுக்கு டியூசன் சென்றாலும்கூட எந்த பேப்பரையும் பார்க்காமல் 'சோசியலிசம்' பற்றி 5 நிமிடம் கூட அவரால் [தேஜஸ்வியால்] பேச முடியாது' என்று பிரசாந்த் கிஷோர் விமர்சித்துள்ளார்.

    Next Story
    ×