என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
இந்தியா
புதிய பாராளுமன்ற கட்டிடத்திற்கு அம்பேத்கர் பெயரை சூட்ட வேண்டும்- தெலுங்கானா சட்டசபையில் தீர்மானம்
- புதிய பாராளுமன்ற கட்டிட பணிகள் இறுதி கட்டத்தில் உள்ளன.
- மத்திய அரசின் மின்சார சட்ட திருத்த மசோதாவிற்கு எதிர்ப்பு தெரிவித்து தீர்மானம்.
ஐதராபாத்:
தலைநகர் டெல்லியில் கடந்த 2020 ஆண்டு டிசம்பர் மாதம் புதிய பாராளுமன்றத்திற்கான அடிக்கல்லை பிரதமர் நரேந்திர மோடி நாட்டினார். கடந்த மாதம், அந்த கட்டிடத்தின் மேற்கூரையில் அமைக்கப்பட்ட தேசிய சின்னத்தை அவர் திறந்து வைத்தார். தற்போது இறுதி கட்ட பணிகள் நடைபெற்று வரும் நிலையில், புதிய பாராளுமன்ற கட்டிடத்தில் குளிர்கால கூட்டத்தொடரை நடத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.
இந்நிலையில் தெலுங்கானா மாநில சட்டசபையில் இன்று புதிய பாராளுமன்ற கட்டிடத்திற்கு பி.ஆர்.அம்பேத்கர் பெயரை வைக்க மத்திய அரசை வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. முன்னதாக அந்த தீர்மானத்தை முன் மொழிந்த மாநில தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் கே.டி.ராமராவ், அரசியலமைப்பு சட்டத்தை உருவாக்கிய அம்பேத்கரின் பெயரை புதிய பாராளுமன்ற கட்டிடத்திற்கு சூட்டுவது பொருத்தமாக இருக்கும் என்றார்.
இதேபோல் மத்திய அரசு முன்மொழிந்துள்ள மின்சார சட்ட திருத்த மசோதாவிற்கு எதிர்ப்பு தெரிவித்தும் தெலுங்கானா சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அம்மாநில எரிசக்தி துறை அமைச்சர் ஜெகதீஷ் ரெட்டி, இந்த தீர்மானத்தைக் கொண்டு வந்தார். இந்த மசோதா விவசாயிகள், ஏழைப் பிரிவினர் மற்றும் மின்துறை ஊழியர்களின் நலன்களுக்கு எதிரானது என்று அப்போது அவர் குறிப்பிட்டார்.