என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
இந்தியா
மணிப்பூரில் பதற்றம்: மாயமானவர்கள் சடலமாக மீட்பு - பாதுகாப்பு படைக்கு மத்திய அரசு முக்கிய உத்தரவு
- 3 பெண்களின் உடல்களும், மேலும் 1 பெண் மற்றும் 2 குழந்தைகளின் உடல்களும் கொண்டுவரப்பட்டது
- பாதுகாப்பு படைக்கு அனைத்து அதிகாரமும் வழங்கும் AFSPA சட்டம் அமல் படுத்தப்பட்டுள்ளது.
இனக்கலவரத்தால் துண்டாடப்பட்டு வரும் மணிப்பூரில் ஒரு வருடம் ஆகியும் இயல்பு நிலை திரும்பவில்லை. குக்கி மற்றும் மெய்தேய் இனத்தைச் சேர்ந்த ஆயுதமேந்திய கிளர்ச்சியாளர்கள் அங்குள்ள கிராமங்களை எரித்தும் மக்களை கொலை செய்தும் கடத்திச் செல்வதுமாக வன்முறை வெறியாட்டங்களில் ஈடுபட்டுள்ளனர்.
கடந்த வாரம் முதல் தலைநகர் இம்பாலில் இருந்து 120 கிலோமீட்டர் தொலைவில் உள்ள ஜிர்பாம் மாவட்டத்தில் வன்முறை சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. ஜிர்பாமில் மார் பழங்குடி சமூகத்தினர் அதிகம் வசிக்கும் அரமாய் தெங்கோல் பகுதியில் உள்ள கிராமத்தில் கடந்த நவம்பர் 7 ஆம் தேதி புகுந்த கிளர்ச்சியர்கள் வீடுகளுக்கு தீ வைத்தனர்.
மேலும் மூன்று குழந்தைகளுக்கு தாயான 31 வயது ஆசிரியை ஒருவரை சித்ரவதை செய்து உயிருடன் எரித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. தொடர்ந்து கடந்த திங்களன்று ஜிர்பாம் பகுதியில் மெய்த்தேய் இனத்தைச் சேர்ந்த 3 குழந்தைகள் உட்பட 6 பேர் காணாமல் போயினர். உயிருடன் எரிக்கப்பட்ட இரண்டு மெய்த்தேய் முதியவர்களின் சடலமும் அன்றைய தினம் கண்டெடுக்கப்பட்டது.
இந்நிலையில் அவர்கள் கடத்தப்பட்டு 5 நாட்கள் கழித்து, காணாமல் போனவர்கள் என சந்தேகிக்கப்படும் 3 பேரின் உடல்கள் மணிப்பூர்-அசாம் எல்லையின் ஜிரி நதி மற்றும் பராக் நதி சங்கமிக்கும் இடத்தில் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் இன்று தெரிவித்துள்ளனர். அவர்களின் உடல்கள் பிரேதப் பரிசோதனைக்காக நேற்று இரவு அசாம் சில்கார் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையே சில்கார் மருத்துவமனைக்கு 3 பெண்களின் உடல்களும், மேலும் 1 பெண் மற்றும் 2 குழந்தைகளின் உடல்களும் கொண்டுவரப்பட்டுள்ளதாக என்டிடிவி களத் தகவல் தெரிவிக்கிறது. அழுகிய நிலையில் உள்ள உடல்களை அடையாளம் காணும் பணி நடந்து வருவதாக கூறப்படுகிறது.
கடத்தப்பட்ட 6 பேரில் லாய்ஷராம் ஹெரோஜித் என்ற மாநில அரசு கீழ்நிலை ஊழியரின் மனைவி, 2 குழந்தைகள், மாமியார் மற்றும் மனைவியின் சகோதரி ஆகியோர் அடங்குவர். எனவே உடல்களை அடையாளம் காண அவர் விரைத்துள்ளார் என்று தகவல் தெரிவிக்கிறது. இவர்கள் அனைவரும் மெய்த்தேய் இனத்தைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
அதிகரித்து வரும் வன்முறை சம்பவங்களை கட்டுப்படுத்த மத்திய அரசு கூடுதலாக 2000 மத்திய ஆயுதக்காவல் படை வீரர்களை மணிப்பூருக்கு அனுப்பி வைத்துள்ளது.
மேலும் மணிப்பூரில் உள்ள அனைத்து பாதுகாப்பு படையினரும் நிலைமையை கட்டுப்படுத்த முடுக்கி விடப்பட்டுள்ளனர் என்றும் அமைதியை மீட்டெடுக்க தேவையான நடவடிக்கை எடுக்குமாறு அவர்ளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாகவும் மத்திய அரசு இன்று அறிக்கை வெளியிட்டுள்ளது.
மணிப்பூரில் 6 மாவட்டங்களில் எந்த தடையும் இன்றி பாதுகாப்பு படை சோதனை நடத்தி நடவடிக்கை எடுக்க அதிகாரம் வழங்கும் AFSPA சட்டம் அமல் படுத்தப்பட்டுள்ளது
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்