என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
இந்தியா
மணிப்பூரில் பதற்றம்.. ஆளுநர் மாளிகை முற்றுகை - சிஆர்பிஎப் வீரர்களை விரட்டி அடித்த மாணவர்கள் - வீடியோ
- ஆளுநர் மாளிகை முன் நூற்றுக்கணக்கான மாணவர்கள் குவிந்துள்ளதால் தலைநகரில் பதற்றமான சூழல் நிலவுகிறது.
- கான்வாய் வானத்தின் மீது கற்களை வீசி சிஆர்பிஎப் வீரர்களை மாணவர்கள் விரட்டிய வீடியோ வெளியாகி உள்ளது
மணிப்பூரில் பழங்குடி அந்தஸ்து தொடர்பாக மெய்தி மற்றும் குக்கி இனக்குழு மக்ளுடையிலான மோதல் கலவரமாக வெடித்து 220 க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்தனர். கடந்த வருடம் முதல் நடந்து வரும் இந்த கலவரத்தில் இரண்டு குக்கி சமூகப் பெண்கள் நிர்வாணமாக ஊர்வலம் அழைத்து செல்லப்பட்ட வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியது. கடந்த ஆண்டு மே மாதம் தொடங்கிய வன்முறை 16 மாதங்கள் ஆகியும் இன்னும் கட்டுப்படுத்தமுடியாமல் இருந்து வருகிறது.
இதுவரை எந்த தீர்வும் காணப்படாமல் இன்றளவும் கலவரங்கள் தொடர்ந்து வருகின்றன. சுமார் 70,000 மக்கள் தங்கள் வீடுகளை விட்டு முகாம்களில் வாழ்ந்து வருகின்றனர். இரு சமூகத்தைச் சேர்ந்த ஆயுதமேந்திய கிளர்ச்சியாளர்கள் மாறி மாறி தாக்குதல்களில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் இந்த தாக்குதல்களைக் கட்டுப்படுத்தக் கோரி தலைநகர் இம்பாலில் ஆளுநர் மாளிகையை முற்றுகையிட அனைத்து மாணவர் அமைப்பை சேர்ந்த பள்ளிகள் கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களமாணவர்கள் பேரணி மேற்கொண்டனர்.
#WATCH | Manipur: Hundreds of students march to Raj Bhavan in Imphal, demanding removal of DGP and Security Advisor over the situation in the state. pic.twitter.com/Agyim2sqDL
— ANI (@ANI) September 9, 2024
அப்போது சிஆர்பிஎப் வீரர்களின் கான்வாய் வாகனத்தின் மீது மாணவர்கள் தாக்குதல் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது. கான்வாய் வானத்தின் மீது கற்களை வீசி சிஆர்பிஎப் வீரர்களை மாணவர்கள் விரட்டிய வீடியோ வெளியாகி உள்ள நிலையில் ஆளுநர் மாளிகை முன் நூற்றுக்கணக்கான மாணவர்கள் குவிந்துள்ளதால் தலைநகரில் பதற்றமான சூழல் நிலவுகிறது. மணிப்பூர் முதல்வர் பதவி விலக வேண்டும் உள்ளிட்ட கோஷத்தை அவர்கள் எழுப்பி வருகின்றனர்.முன்னதாக வங்கதேசத்தில் ஆட்சியிலிருந்த ஷேக் ஹசீனா அரசை கண்டித்து அந்நாட்டின் மாணவர்கள் நடத்திய போராட்டம் உலக அளவில் அதிர்வலையை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.
VIDEO | Manipur: All Manipur Students Union (AMSU) protesters attacked the convoy of CRPF in Imphal.#ManipurVoilence pic.twitter.com/iFiCVm0FL8
— Press Trust of India (@PTI_News) September 9, 2024
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்