என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
இந்தியா
ஜார்க்கண்ட் தேர்தல்.. அரசியல் சாசனம், நீர், காடுகளின் பாதுகாப்புக்கு கிடைத்த வெற்றி - ராகுல்காந்தி
- 81 தொகுதிகள் கொண்ட ஜார்கண்டில் இந்தியா கூட்டணி 56 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது.
- ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா மட்டும் 34 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது.
ஜார்க்கண்ட் மாநில சட்டமன்றத் தேர்தலில் ஆளும் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா, காங்கிரஸ், ராஷ்ட்ரிய ஜனதா தளம் கட்சிகள் அடங்கிய இந்தியா கூட்டணி பெரும் வெற்றி முகத்தில் உள்ளது. வாக்கு எண்ணிக்கையில் இந்தியா கூட்டணி பெரும்பான்மையைத் தாண்டி விட்டது. இதன்மூலம் தேர்தலுக்கு பிந்திய கருத்துக்கணிப்பு முற்றிலும் பொய்துள்ளது.
81 தொகுதிகள் கொண்ட ஜார்கண்டில் இந்தியா கூட்டணி 56 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா மட்டும் 34 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது.
மகாராஷ்டிராவில் இந்தியா கூட்டணி படுதோல்வி அடைந்தாலும் ஜார்கண்டில் மீண்டும் ஆட்சியை தக்க வைத்துள்ளது.
இந்நிலையில், ஜார்க்கண்ட் மாநிலத்தில் வெற்றி பெற்றது தொடர்பாக மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல்காந்தி தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
அவரது பதிவில், "இந்தியா கூட்டணிக்கு அபார வெற்றியை பரிசளித்த ஜார்க்கண்ட் மக்களுக்கு நன்றி. முதலமைச்சர் ஹேமந்த் சோரன், ஜேஎம்எம் கட்சி தொண்டர்களுக்கு வாழ்த்துகள். இது அரசியல் சாசனத்துடன் நீர், காடுகள் மற்றும் நிலங்களின் பாதுகாப்புக்கு கிடைத்த வெற்றி" என்று பதிவிட்டுள்ளார்.