search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    பாராளுமன்றத்தில் கலர் குண்டு வீச்சு: கைதான 4 பேருக்கு 7 நாள் போலீஸ் காவல்
    X

    பாராளுமன்றத்தில் கலர் குண்டு வீச்சு: கைதான 4 பேருக்கு 7 நாள் போலீஸ் காவல்

    • பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய இச்சம்பவத்துக்கு பாதுகாப்பு குறைபாடுதான் காரணம் என்றன எதிர்க்கட்சிகள்.
    • இந்த விவகாரம் தொடர்பாக 8 பாதுகாப்பு பணியாளர்களை மக்களவை செயலகம் அதிரடியாக சஸ்பெண்ட் செய்தது.

    புதுடெல்லி:

    பாராளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. நேற்று மக்களவை நடைபெற்றபோது திடீரென பார்வையாளர்கள் மாடத்தில் இருந்து 2 பேர் அவை நடைபெறும் இடத்திற்குள் குதித்து வண்ண புகை குண்டுகளை வீசினர். மஞ்சள் நிறத்தில் புகை வெளியேறி புகை மண்டலமாகக் காட்சி அளித்தது.

    பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய இச்சம்பவத்துக்கு பாதுகாப்பு குறைபாடுதான் முக்கிய காரணம் என எதிர்க்கட்சிகள் தெரிவித்தன.

    இதுதொடர்பாக 5 பேர் கைது செய்யப்பட்டனர். இவர்கள் மீது உபா உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

    இந்த விவகாரம் தொடர்பாக 8 பாதுகாப்பு பணியாளர்களை மக்களவை செயலகம் அதிரடியாக சஸ்பெண்ட் செய்தது.

    இந்நிலையில், கைது செய்யப்பட்ட 4 பேரும் டெல்லி பாட்டியாலா நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். அவர்களுக்கு 15 நாள் காவலில் எடுத்து விசாரிக்க போலீசார் கோரிக்கை விடுத்தனர். ஆனால் 7 நாள் அவகாசம் கொடுத்து நீதிமன்றம் உத்தரவிட்டது.

    Next Story
    ×