search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    இஸ்ரேல் டிராவல்ஸ் என்ற பெயரில் ஓடிய பஸ்.. சர்ச்சையானதால் நொந்துபோன ஓனர் - புது பேர் இதுதான்
    X

    'இஸ்ரேல் டிராவல்ஸ்' என்ற பெயரில் ஓடிய பஸ்.. சர்ச்சையானதால் நொந்துபோன ஓனர் - புது பேர் இதுதான்

    • லெஸ்டர் கடீல் என்ற நபர் இஸ்ரேல் டிராவல்ஸ் என்ற பெயரில் புதிதாக பஸ் சேவையை தொடங்கியிருந்தார்
    • பாலஸ்தீன நகரங்களின் மீது இஸ்ரேல் நடத்தி வரும் தாக்குதலில் 41 ஆயிரத்துக்கும் அதிகமானோர் உயிரிழந்தனர்.

    கர்நாடகாவில் இஸ்ரேல் என்ற பெயரில் ஓடிய தனியார் பஸ் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடக மாநிலம் மங்களூரில் மூட்பித்ரி[Moodbidri]-முல்கி [Mulki] ரூட்டில் தனியார் டிராவல்ஸ் பஸ் ஒன்றின் பெயர் இணையத்தில் வைரலாகி கண்டனங்களை குவித்தது.

    அதாவது லெஸ்டர் கடீல் [Lester Kateel] என்ற நபர் இஸ்ரேல் டிராவல்ஸ் என்ற பெயரில் புதிதாக பஸ் சேவையை தொடங்கியிருந்தார். 12 வருடமாக இஸ்ரேலில் வேலை பார்த்த லெஸ்டர் கடீல் அதை நினைவுகூரும் விதமாக இஸ்ரேல் டிராவல்ஸ் என்று பெயர் வைத்துள்ளார். ஆனால் இஸ்ரேல் என எழுதப்பட்டிருக்கும் பஸ்ஸின் புகைப்படம் இணையத்தில் பெரும் விவாதத்தை ஏற்படுத்திய நிலையில் விட்டால் போதும் என்று தனது பஸ்ஸின் பெயரை கடீல் மாற்றியுள்ளார்.

    பாலஸ்தீன நகரங்களின் மீது கடந்த 1 வருட காலமாக இஸ்ரேல் நடத்தி வரும் தாக்குதலில் 41 ஆயிரத்துக்கும் அதிகமானோர் உயிரிழந்தனர். மேலும் 97 ஆயிரத்துக்கும் அதிகமானோர் படுகாயமடைந்துள்ளனர். இன்று அதிகாலை காசாவில் மசூதி மற்றும் பள்ளியின் மீது நடந்த தாக்குதலில் 26 பேர் பலியானார்கள்.

    மேலும் லெபானானிலும் இஸ்ரேல் தாக்குதலில் உயிரிழப்பு எண்ணிக்கை 2 ஆயிரத்தைக் கடந்துள்ளது. இந்த சூழலில் இஸ்ரேல் டிராவல்ஸ் என்று பெயர் வைப்பது பலரின் மனதையும் புண்படுத்தும் வகையில் உள்ளதாக இருப்பதால் கடீலுக்கு கண்டங்கள் எழுந்தது.

    எனவே இஸ்ரேல் டிராவல்ஸ் என்ற பெயரை ஜெருசலேம் டிராவல்ஸ் என்று மாற்றியுள்ளார் ஓனர் கடீல். ஜெருசலேம் என்பது புனிதமான இடமாக கருதப்படுவதால் யாருக்கும் படிப்பில்லை என்ற வகையில் அவர் இந்த பெயர் மாற்றத்தை செய்துள்ளார்.

    Next Story
    ×