search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    ஆறிப்போன உணவைப் பரிமாறிய உடுப்பி ஹோட்டல் .. ரூ.7000 அபராதம் விதித்த நீதிமன்றம்
    X

    ஆறிப்போன உணவைப் பரிமாறிய உடுப்பி ஹோட்டல் .. ரூ.7000 அபராதம் விதித்த நீதிமன்றம்

    • ரம்யமான நாளொன்றின் காலைப் பொழுதில் சிற்றுண்டி சாப்பிட பெங்களூரில் உள்ள உடுப்பி கார்டன் ரெஸ்டாரண்டில் நுழைந்தார் ஒரு பெண்
    • சூடான உணவுதான் வேண்டும் என்று அந்த பெண் கேட்ட நிலையில் அதெல்லாம் தரமுடியாது என்று சர்வர் தெனாவட்டாக பதிலளித்துள்ளார்.

    ஐஸ்கிரீமில் மனித விரல், பூரான், மெஸ் உணவில் பாம்பு, குலோம்பஜாமூனில் கரப்பான் பூச்சி, தோசைக்கு பரிமாறப்பட்ட சாம்பாரில் செத்துக்கிடந்த எலி என சமீப காலமாக இந்தியாவில் சர்ச்சைகளுக்கு பஞ்சம் இல்லாத வகையில் சம்பவங்கள் அடுத்தடுத்து வெளிச்சத்துக்கு வந்துகொண்டிருக்கின்றன. சிறியது முதல் பெரிய ஹோட்டல்கள் வரை பரிமாறப்படும் உணவின் தரம் குறித்த புகார்கள் எழுந்த வண்ணம் உள்ளன.

    இந்நிலையில் கர்நாடக தலைநகர் பெங்களூரில் உள்ள உடுப்பி ஹோட்டல் ஒன்றில் பரிமாறப்பட்ட உணவு ஆறியிருந்ததால் டென்ஷனான கஸ்டமர் சட்டப்போராட்டத்தை முன்னெடுத்துள்ளார். ரம்யமான நாளொன்றின் காலைப் பொழுதில் சிற்றுண்டி சாப்பிட பெங்களூரில் உள்ள உடுப்பி கார்டன் ரெஸ்டாரண்டில் நுழைந்த பெண்ணுக்கு ஆறிப்போன உணவு பரிமாறுபாடுள்ளது.

    தனக்கு சூடான உணவுதான் வேண்டும் என்று அந்த பெண் கேட்ட நிலையில் அதெல்லாம் தரமுடியாது என்று சர்வர் தெனாவட்டாக பதிலளித்துள்ளார். இதனால் மனம் நொந்த பெண் நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கில் ஆறிப்போன உணவைப் பரிமாறியதற்காக உடுப்பி ஹோட்டலுக்கு ரூ.7000 விதித்து மாவட்ட நுகர்வோர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

    Next Story
    ×