search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    லேஸ் சிப்ஸ் தயாரிப்பில் பாமாயிலுக்கு பதிலாக சூரியகாந்தி எண்ணெய் பயன்படுத்த முடிவு... ஏன்?
    X

    லேஸ் சிப்ஸ் தயாரிப்பில் பாமாயிலுக்கு பதிலாக சூரியகாந்தி எண்ணெய் பயன்படுத்த முடிவு... ஏன்?

    • லேஸ் சிப்ஸ் பாமாயில் கொண்டு தயாரிக்கப்படுகிறது.
    • லேஸ் சிப்சை பாமாயில் பயன்படுத்தாமல் சூரியகாந்தி எண்ணெய் கொண்டு தயாரிக்கும் முயற்சியில் அந்நிறுவனம் ஈடுபட்டுள்ளது.

    பெப்சிகோ இந்தியா நிறுவனத்தின் உருளைக்கிழங்கு சிப்ஸ் பிராண்டான லேஸ் சிப்ஸ் இந்தியாவில் மிக பிரபலமானது. இந்த லேஸ் சிப்ஸ் பாமாயில் கொண்டு தயாரிக்கப்படுகிறது.

    பாமாயில் கொண்டு தயாரிக்கப்படும் உணவுப்பொருட்கள் ஆரோக்கியமற்றது என்ற எண்ணம் இந்திய மக்களிடம் பொதுவாக உள்ளது.

    ஆகவே லேஸ் சிப்சை பாமாயில் பயன்படுத்தாமல் சூரியகாந்தி எண்ணெய் கொண்டு தயாரிக்கும் முயற்சியில் அந்நிறுவனம் ஈடுபட்டுள்ளது.

    மேலும் இந்தியாவில் தயாரிக்கப்படும் லேஸ் சிப்ஸ்களில் உப்பின் அளவையும் குறைக்க அந்நிறுவனம் முடிவு செய்துள்ளது. 2025 ஆம் ஆண்டுக்குள் 1 கலோரிக்கு 1.3 மில்லி கிராம் அளவுக்கு மேல் சோடியம் இருக்க கூடாது என்று அந்நிறுவனம் முடிவெடுத்துள்ளது.

    இந்தியாவில் தயாரிக்கப்படும் பல தின்பண்டங்கள் பாமாயில் கொண்டே தயாரிக்க படுகிறது. ஏனெனில் சூரியகாந்தி எண்ணெயை விட பாமாயில் விலை குறைவானது என்பதே இதற்கு காரணம்.

    Next Story
    ×