என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
இந்தியா
தேர்தல் பத்திரங்கள் தொடர்பான கூடுதல் விவரங்களை தேர்தல் ஆணையம் வெளியிட்டது
- 2018-19ம் ஆண்டு ஏப்ரல் மாதத்திற்கு முந்தைய தேர்தல் பத்திர விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளது.
- ஏற்கனவே, 2019-ம் ஆண்டு ஏப்ரல் முதல் 2024-ம் ஆண்டு பிப்ரவரி 15-ம் தேதி வரை பெற்ற தேர்தல் பத்திர விவரங்கள் வெளியானது
தேர்தல் பத்திர விவரங்களை இந்திய தேர்தல் ஆணையத்திடம் வழங்க வேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. அதன்படி எஸ்பிஐ வங்கி தேர்தல் ஆணையத்திடம் விவரங்களை ஒப்படைத்தது. அதில் நன்கொடையாளர்கள் அளித்த தொகை, கட்சிகள் பெற்றுக்கொண்ட தொகை ஆகிய விவரங்கள் தனி தனியாக இருந்தது.
இதனையடுத்து, உச்சநீதிமன்றம் "அரசமைப்பு சாசன அமர்வு தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளபடி அனைத்து விவரங்களையும் எஸ்பிஐ வங்கி தேர்தல் ஆணையத்திற்கு வழங்கவில்லை.
தேர்தல் பத்திரத்தின் எண், தேர்தல் பத்திரத்தை வாங்கிய நபர், எந்த கட்சிக்கு அவர் நிதி வழங்கியுள்ளார். எவ்வளவு பணம். டெனாமினேசன் (denomination) ஆகியவற்றை வழங்க வேண்டும். திங்கட்கிழமைக்குள் வழங்க வேண்டும். மேலும், பேப்பர் வடிவில் இருக்கும் அனைத்து தகவல்களையும் டிஜிட்டலாக்க வேண்டும்" நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில், தேர்தல் பத்திரங்கள் தொடர்பான கூடுதல் விவரங்களை இன்று இந்திய தேர்தல் ஆணையம் வெளியிட்டது. தேர்தல் பத்திரங்கள் குறித்த உச்ச நீதிமன்ற பதிவேட்டில் இருந்து டிஜிட்டல் வடிவில் பெறப்பட்ட தரவுகளை இந்திய தேர்தல் ஆணையம் இன்று தனது இணையதளத்தில் பதிவேற்றம் செய்துள்ளது.
2018-19ம் ஆண்டு ஏப்ரல் மாதத்திற்கு முந்தைய தேர்தல் பத்திர விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளது. https://www.eci.gov.in/candidate-politicalparty என்ற இணையதளத்தை அணுகி தெரிந்து கொள்ளலாம். ஏற்கனவே, 2019-ம் ஆண்டு ஏப்ரல் முதல் 2024-ம் ஆண்டு பிப்ரவரி 15-ம் தேதி வரை பெற்ற தேர்தல் பத்திர விவரங்கள் வெளியானது என்பது குறிப்பிடத்தக்கது.