search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    தாயை தள்ளிவிட்டு கொன்ற மகன்.. ஊதுபத்தி ஏற்றி 4 நாள் சடலத்துடன் வாழ்ந்த கொடூரம் - வெளிவந்த அதிர்ச்சி
    X

    தாயை தள்ளிவிட்டு கொன்ற மகன்.. ஊதுபத்தி ஏற்றி 4 நாள் சடலத்துடன் வாழ்ந்த கொடூரம் - வெளிவந்த அதிர்ச்சி

    • இவரது கணவர் ராம் மிலன் சென்னையில் உள்ள பாபா அணுசக்தி நிலையத்தில் விஞ்ஞானியாக பணியாற்றுகிறார்
    • 5வது நாள் அமன் வீட்டில் இருந்து வெளியேறி அருகில் உள்ள கோவிலில் சென்று அமர்ந்துள்ளான்.

    உத்தரப் பிரதேச மாநிலம் கோரக்பூரில் வசித்து வந்தவர் ஆர்த்தி தேவி. இவரது கணவர் ராம் மிலன் சென்னையில் உள்ள பாபா அணுசக்தி நிலையத்தில் விஞ்ஞானியாக பணியாற்றுகிறார். மூத்த மகள் வேறு ஒரு நகரில் தங்கி எம்பிபிஎஸ் படித்து வருகிறார். எனவே தனது 17 வயது மகன் அமன் உடன் ஆர்த்தி தேவி வீட்டில் தனியாக வசித்து வருகிறார்.

    கடந்த டிசம்பர் 3 ஆம் தேதி பள்ளி செல்ல நேரமாகிறது என தூங்கிக்கொண்டிருந்த தனது மகனை எழுப்பியுள்ளார். ஆத்திரமடைந்த மகன் தாயை கீழே தள்ளி விட்டதில் அவரது தலையில் பலமாக அடிபட்டுள்ளது. காயம் காரணமாக தாய் ஆர்த்தி தேவி அங்கேயே உயிரிழந்தார். இதனால் பதற்றம் அடைந்த மகன் அமன் தாயின் உயிரிழப்பை மறைக்க முயன்றுள்ளான்.

    தொடர்ந்து வீட்டில் சிசிடிவி இணைப்பை துண்டித்து வீட்டை வெளியில் இருந்து பூட்டிவிட்டு தாயின் சடலத்துடன் 4 நாட்கள் உள்ளேயே இருந்துள்ளான். சென்னையில் உள்ள ராம் மிலன் பலமுறை அழைத்தும் ஆர்த்தி தேவி செல்போன் ஸ்விட்ச் ஆப் என வந்துள்ளது.

    இடைப்பட்ட நேரத்தில் ஆர்த்தி தேவியின் உடல் அழுகி துர்நாற்றம் வரத் தொடங்கிய நிலையில் ஊதுபத்திகளை ஏற்றி அந்த வாடை வெளியே செல்லாமல் அமன் தடுத்துள்ளான். இருப்பினும் 5வது நாள் அமன் வீட்டில் இருந்து வெளியேறி அருகில் உள்ள கோவிலில் சென்று அமர்ந்துள்ளான். தந்தை ராம் மிலன் தனது அண்ணியை அழைத்து வீட்டில் சென்று பார்க்க சொல்லியுள்ளார்.

    அதன்படி அவர் வந்து பார்த்த போது வீடு உள்ளே இருந்து போடப்பட்டிருந்தது. மேலும் துர்நாற்றம் வந்துகொண்டிருந்தது. சென்னையில் இருந்து உடனே கிளம்பி வந்த ராம் மிலன் வீட்டுக்கு சென்று பார்த்தபோது அவரது மனைவியின் உடல் ரத்த வெள்ளத்தில் கிடந்துள்ளது.

    இதுதொடர்பாக போலீசுக்கு புகார் அளிக்கப்பட்ட நிலையில் பக்கத்தில் இருந்த கோவிலில் இருந்த அமனும் கண்டுபிடிக்கப்பட்டான்.தனது தாய் கீழே விழுந்ததில் இறந்ததாகவும் பயத்தில் தான் 4 நாட்களாக வெளியே சுற்றித் திரிந்ததாகவும் கூறியுள்ளார்.

    ஆனால் வீட்டில் ரத்தக் கரை இரண்டு இடங்களில் இருந்த நிலையில் ஆர்த்தி தேவி உடல் இழுத்துச் செல்லப்பட்டதை போலீஸ் உணர்ந்தது. மேலும் அமன் போதைப் பழக்கத்துக்கு அடிமையானவன் என அக்கம்பக்கத்தினர் தெரிவித்தனர். பள்ளியிலும் அமன் மீது பல்வேறு குற்றச்சாட்டுகள் இருந்துள்ளது.

    தொடர்ந்து அமனிடம் நடத்தப்பட்ட விசாரணையில் தாய் பள்ளிக்கு செல்லுமாறு கூறியதாகவும் இதற்கு அமன் மறுத்ததால், அமன் அதிக பணத்தை வாங்கி செலவழிப்பதாக வாக்குவாதம் ஏற்பட்டு, தாய் விரக்தியில் பணத்தை தன் மீது தூக்கியெறிந்தார் எறிந்தார், எனவே அவரை தான் கீழே தள்ளி விட்டதாக அமன் ஒப்புக்கொண்டார். இதைத்தொடர்ந்து அமன் மீது வழக்குப்பதிவு செய்த போலீசார் அம சிறுவர் சீர்திருத்தப் பள்ளிக்கு அமனை அனுப்பி வைத்தனர்.

    Next Story
    ×