search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    உதவி கேட்டு போலீசுக்கு போன் செய்த திருடர்கள்- ஏன் தெரியுமா?
    X

    உதவி கேட்டு போலீசுக்கு போன் செய்த திருடர்கள்- ஏன் தெரியுமா?

    • பொதுமக்கள் ஏராளமானோர் அங்கு கூடினர்.
    • கைதானவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ஜெய்ப்பூர்:

    ராஜஸ்தான் மாநிலம் கோலாயத்தில் உள்ள ஒரு வீட்டில் திருட சென்ற கொள்ளையர்கள் உதவிக்கு போலீசாரை அழைத்து கைதான சம்பவம் நடைபெற்றது.

    கோலாயத்தில் வார்டு எண் 10-ல் அமைந்துள்ள மதன் பரீக் என்பவரது வீட்டில் கடந்த வியாழக்கிழமை இரவு 2 மணியளவில் திருடர்கள் நுழைந்துள்ளனர். அப்போது மதன் பரீக் அருகில் உள்ள அண்ணன் வீட்டிற்கு சென்று விட்டு சிறிது நேரத்தில் வீடு திரும்பியுள்ளார். அப்போது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டிருப்பதை கண்ட அவர் அக்கம் பக்கத்தினருக்கு தகவல் தெரிவித்தார்.

    இதைடுயத்து பொதுமக்கள் ஏராளமானோர் அங்கு கூடினர். இதனைக் கண்ட திருடர்கள் வீட்டின் ஜன்னலை உடைத்து தப்ப முயன்றனர். ஆனால் ஜன்னலை உடைக்க முடியாததால் செய்வதறியாது தவித்தனர். வெளியே சென்றால் பொதுமக்கள் கையில் சிக்கினால் அவ்வளவுதான் என உணர்ந்த அவர்கள் கதவை உள்பக்கமாக பூட்டிக்கொண்டு போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

    இதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் திருடர்கள் 2 பேரை கைது செய்தனர். அவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×