என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
இந்தியா
டெல்லி பள்ளி மாணவி மீது ஆசிட் வீசிய 3 பேர் கைது- பொது வெளியில் தூக்கிலிட கவுதம் கம்பீர் வலியுறுத்தல்
- பாதிக்கப்பட்ட மாணவிக்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை.
- டெல்லியில் இனிமேல் ஆசிட் விற்பனை நடைபெறாது என வியாபாரிகள் உறுதி,
டெல்லியின் தெற்கு துவாரகா பகுதியில் பள்ளிக்கு செல்வதற்காக சாலையில் நடந்து சென்ற 12 ஆம் வகுப்பு பள்ளி மாணவி மீது பைக்கில் வந்த இருவர் ஆசிட்டை வீசி விட்டு தப்பிச் சென்றனர். வலி பொறுக்க முடியாமல் கதறியபடி அந்த மாணவி சாலையில் கீழே விழுந்தார். இந்த கொடூர தாக்குதலில் அவரது முகம் மற்றும் கண்களில் பாதிப்பு ஏற்பட்டது. உடனடியாக சப்தர்ஜங் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட அந்த மாணவிக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
ஆசிட் வீசிய சம்பவத்தில் சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்த போலீசார் அதன் அடிப்படையில் முக்கிய குற்றவாளி உள்பட 3 பேரை கைது செய்துள்ளனர். ஆன்லைன் மூலம் நைட்ரிக் அமிலத்தை வாங்கி அந்த குற்றவாளிகள் மாணவி மீது வீசியிருக்கலாம் என்றும், தடயவியல் பரிசோதனையின் பின்னரே அது உறுதிப்படுத்தப்படும் என்று போலீசார் தெரிவித்தனர்.
இந்நிலையில் மாணவி மீதான ஆசிட் வீச்சிற்கு டெல்லி வியாபாரிகள் கண்டனம் தெரிவித்துள்ளனர். டெல்லியில் இனிமேல் ஆசிட் விற்பனை நடைபெறாது என்றும் அவர்கள் உறுதியளித்துள்ளனர்.ஆசிட் விற்பனையைத் தடுக்க தேவையான அனைத்து நடவடிக்கைகளை அதிகாரிகள் எடுக்க வேண்டும் என்றும், ஆசிட் வாங்க வருபவர்களை கண்காணிக்க வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தி உள்ளனர்.
பள்ளி மாணவி மீதான ஆசிட் வீச்சிற்கு இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரும், பாஜக எம்.பி.யுமான கவுதம் கம்பீர் கண்டனம் தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், வெறும் வார்த்தைகளால் எந்த நீதியையும் நம்மால் வழங்க முடியாது, இந்த மிருகங்களுக்கு அளவிட முடியாத வலியைப் பற்றிய பயத்தை நாம் ஏற்படுத்த வேண்டும். துவாரகாவில் பள்ளி மாணவி மீது ஆசிட் வீசிய இளைஞர்களை பொதுவெளியில் பகிரங்கமாக தூக்கிலிட வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.