என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
இந்தியா
ஜனநாயகத்தை காக்கவே போராடி வருகிறோம்: திருச்சி சிவா எம்.பி.
- நிதி வழங்குவதில் மத்திய அரசு ஓரவஞ்சனையான செயல்படுகிறது.
- பாராளுமன்றத்தில் நாங்கள் அவமானப்படுத்தப்படுகிறோம்.
புதுடெல்லி:
ஆளும் பா.ஜ.க.விற்கு எதிராக "இந்தியா கூட்டணி" உறுப்பினர்கள் பாராளுமன்ற வளாகத்தில் உள்ள காந்தி சிலைக்கு முன்னால் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் காங்கிரஸ் கட்சி தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி மற்றும் பிற கூட்டணி கட்சி உறுப்பினர்கள், சஸ்பெண்டு ஆன எம்.பி.க்கள் என அனைவரும் கலந்து கொண்டனர்.
இதைத்தொடர்ந்து திருச்சி எம்.பி. சிவா செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:
* வெள்ள பாதிப்புக்கு தமிழக அரசு கேட்ட நிதியை மத்திய அரசு வழங்கவில்லை. நிதி வழங்குவதில் மத்திய அரசு ஓரவஞ்சனையான செயல்படுகிறது.
* பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் பேச அனுமதி மறுக்கப்படுகிறது.
* வரலாற்றில் இல்லாத அளவுக்கு 141 எம்.பி.க்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.
* பாராளுமன்றத்திற்கு பதில் சொல்ல வேண்டியது அரசின் கடமை.
* பாராளுமன்றத்தில் எங்களை பேச அனுமதிப்பதில்லை.
* நியாயமான கோரிக்கைகளை எழுப்பியும், எங்களின் குரலுக்கு செவிசாய்க்கவில்லை.
* பாராளுமன்றத்தில் நாங்கள் அவமானப்படுத்தப்படுகிறோம்.
* எதிர்க்கட்சிகள் பாராளுமன்றத்தை முடக்குவது போல் சித்தரிக்கின்றனர்.
* ஜனநாயகத்தை காக்கவே நாங்கள் போராடி வருகிறோம்.
இவ்வாறு அவர் கூறினார்.