search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    திருப்பதி லட்டில் குட்கா புகையிலை.. வீடியோ எடுத்து வெளியிட்ட பக்தர்.. அடுத்த சர்ச்சை
    X

    திருப்பதி லட்டில் குட்கா புகையிலை.. வீடியோ எடுத்து வெளியிட்ட பக்தர்.. அடுத்த சர்ச்சை

    • உறவினர்களுக்குக் கொடுப்பதற்காக அங்கிருந்து லட்டு பிரசாதம் வாங்கி வந்துள்ளார்.
    • புகையிலை பொருட்கள் உதிருவதாக வீடியோ எடுத்து சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார்.

    திருப்பதி வெங்கடாசலபதி கோவிலில் வழங்கப்படும் உலகப் பிரசித்தி பெற்ற லட்டு பிரசாதம் மாட்டிறைச்சி கொழுப்பு மற்றும் பன்றிக் கொழுப்பு கலந்த நெய்யினால் தயாரிக்கப்படுகிறது என்ற சர்ச்சை பூதாகரமாக வெடித்துள்ளது. இந்நிலையில் திருப்பதி லட்டில் குட்கா புகையிலை பொருட்கள் இருப்பதாக பக்தர் ஒருவர் வெளியிட்டுள்ள வீடியோ சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.

    தெலங்கானா மாநிலம் கம்மம் மாவட்டத்தைச் சேர்ந்த பெண் ஒருவர் கடந்த செப்டம்பர் 19 ஆம் தேதி திருப்பதி கோவிலுக்குச் சென்றுள்ளார். உறவினர்களுக்குக் கொடுப்பதற்காக அங்கிருந்து லட்டு பிரசாதம் வாங்கி வந்துள்ளார்.

    அதை உறவினர்களுக்கு எடுத்துக் கொடுக்கும்போது அதிலிருந்து குட்கா புகையிலை பொருட்கள் உதிருவதாக வீடியோ எடுத்து சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார். இந்நிலையில் இந்த குற்றச்சாட்டைத் திருப்பதி தேவஸ்தானம் முற்றிலுமாக மறுத்துள்ளது. மேலும் வதந்திகளைப் பரப்ப வேண்டாம் என்று கோரிக்கை விடுத்துள்ளது.

    Next Story
    ×