search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    திருப்பதி ஆன்லைன் தரிசன டிக்கெட்: மோசடி கும்பலுக்கு வலைவீச்சு
    X

    திருப்பதி ஆன்லைன் தரிசன டிக்கெட்: மோசடி கும்பலுக்கு வலைவீச்சு

    • திருப்பதியில் பக்தர்கள் தரிசனம் செய்வதற்காக மாதந்தோறும் ரூ.300 சிறப்பு தரிசன டிக்கெட்டுகள் ஆன்லைனில் வெளியிடப்படுகின்றன.
    • கடந்த 5 ஆண்டுகளில் நடந்த குளறுபடி, முறைகேடு, ஊழல்களை விசாரிக்க என முதல் மந்திரி சந்திரபாபு நாயுடு உத்தரவிட்டார்.

    திருப்பதி:

    திருப்பதியில் பக்தர்கள் சிரமமின்றி தரிசனம் செய்வதற்காக மாதம்தோறும் ரூ.300 சிறப்பு தரிசன டிக்கெட்டுகள் ஆன்லைனில் வெளியிடப்படுகின்றன.

    ஆன்லைன் தரிசன டிக்கெட் இல்லாத பக்தர்கள் தரிசனம் செய்வதற்காக ஏழுமலையான் கோவில் மற்றும் ரேணிகுண்டா விமான நிலையத்தில் ஸ்ரீவாணி அறக்கட்டளை மூலம் டிக்கெட் விநியோகம் செய்து வருகின்றனர்.

    இந்த நிலையில் கடந்த 5 ஆண்டுகளில் நடந்த குளறுபடி, முறைகேடு, ஊழல்கள் ஆகியவற்றை விசாரிக்க வேண்டும் என முதல் மந்திரி சந்திரபாபு நாயுடு உத்தரவிட்டார். அதன்படி ஆந்திர மாநில சி.ஐ.டி. போலீசார் மற்றும் திருப்பதி தேவஸ்தான விஜிலன்ஸ் அதிகாரிகள் கடந்த 5 ஆண்டுகளில் ஸ்ரீவாணி அறக்கட்டளை தரிசன டிக்கெட் மோசடி குறித்து விசாரணை நடத்தினர்.

    விசாரணையில் 10 ஆயிரத்து 500 ரூபாய் செலுத்தி வாங்க வேண்டிய ஸ்ரீவாணி அறக்கட்டளை தரிசன டிக்கெட்டுகளை ரூ.14,449 கட்டணத்தில் டிக்கெட்களை குறிப்பிட்ட 545 பேர் மட்டுமே ஆன்லைன் மூலம் வாங்கி இருப்பது தெரிய வந்தது.

    அவர்கள் 545 பேரும் இதுவரை 15 கோடியே 17 லட்சத்து 14 ஆயிரத்து 500 தரிசன டிக்கெட் வாங்க செலவு செய்திருப்பதும், ஒவ்வொருவரும் தலை 2 லட்சத்து 78 ஆயிரத்து 378 ரூபாய் தங்கள் வங்கி கணக்கில் இருந்து பணம் செலுத்தி ஸ்ரீவாணி அறக்கட்டளை தரிசன டிக்கெட் வாங்கி இருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

    அவர்களில் பலர் இடைத்தரகர்களாக இருக்கலாம் என சந்தேகம் எழுந்துள்ளது. அவர்கள் வாங்கிய டிக்கெட்டுகளுடன் தரிசனத்திற்காக அடுத்த முறை திருப்பதிக்கு வரும் நபர்களை பிடித்து விசாரணை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

    ஏராளமான பக்தர்கள் போலியான அடையாள அட்டைகளை பயன்படுத்தி தரிசன டிக்கெட், ஆர்ஜித சேவை டிக்கெட் மற்றும் தங்கும் அறைகளை வாங்கியிருப்பது தெரிய வந்துள்ளது. இது தொடர்பாக போலீசார் விசாரித்து வருகின்றனர்.

    Next Story
    ×