என் மலர்
இந்தியா
காங்கிரஸ் உடன் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையில் பங்கேற்கமாட்டோம்: திரிணாமுல் காங்கிரஸ்
- 42 இடங்களை கொண்ட மேற்கு வங்காளத்தில் இரண்டு இடங்களை மட்டுமே காங்கிரஸ்க்கு ஒதுக்க திரிணாமுல் காங்கிரஸ் முடிவு.
- காங்கிரஸ் அதிகமான இடங்களில் போட்டியிட விரும்புவதால் காங்கிரஸ்- மம்தா கட்சி இடையே மோதல் ஏற்படும் நிலை.
2024 மக்களவையில் பா.ஜனதாவை தோற்கடிப்பதற்காக எதிர்க்கட்சிகள் INDIA (இந்திய தேசிய வளர்ச்சியை உள்ளடக்கிய கூட்டணி- Indian National Developmental Inclusive Alliance) கூட்டணியை உருவாக்கியுள்ளன.
இந்தியா கூட்டணியில் 26 கட்சிகளுக்கு மேல் இடம் பிடித்துள்ளன. விரைவில் தேர்தல் வர இருப்பதால் 543 தொகுதிகளில், எத்தனை இடங்களில் யார் யார் போட்டியிடுவது என்ற கேள்வி எழுந்துள்ளது. இதனால் காங்கிரஸ் கட்சி தொகுதி பங்கீடு குறித்த பேச்சுவார்த்தையை நடத்தி வருகிறது. இதற்காக ஒரு குழுவை அமைத்துள்ளது.
ஏனென்றால் பெரும்பாலான மாநிலங்களில் அந்தந்த மாநில கட்சிகள் வலுவாக உள்ளன. இதனால் காங்கிரஸ் போட்டியிடும் இடங்கள் கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இந்த சிக்கலை தீர்ப்பதற்காக குழு அமைக்கப்பட்டுள்ளது.
தொகுதி பங்கீடு சிக்கல் மேற்கு வங்காளத்தில் எதிரெலிக்கிறது. 42 இடங்களை கொண்ட மேற்கு வங்காளத்தில் காங்கிரஸ் கட்சிக்கு இரண்டு தொகுதிகள் மட்டுமே ஒதுக்கப்படும் என திரிணாமுல் காங்கிரஸ் கறாராக தெரிவித்து விட்டது. காங்கிரஸ் கட்சியோ நாங்கள் பிட்சை கேட்கவில்லை. எங்களுடைய முழுப்பலத்துடன் போட்டியிடுவோம் எனத் தெரிவித்திருந்தது.
இந்த நிலையில் காங்கிரஸ் ஒவ்வொரு மாநில கட்சிகளை தொகுதி பங்கீடு குறித்து பேச்சுவார்த்தை நடத்த அழைத்து வருகிறது.
அந்த வகையில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சிக்கும் அழைப்பு விடுத்துள்ளதாக தெரிகிறது. ஆனால், தொகுதி பங்கீடு தொடர்பான பேச்சுவார்த்தையில் எங்கள் கட்சி சார்பில் பிரதிநிதிகள் கலந்த கொள்ளமாட்டார்கள். எங்களது நிலைப்பாட்டை தெரிவித்துவிட்டோம் என திரிணாமுல் கட்சி கூறிவிட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.
ஒருவேளை காங்கிரஸ்- திரிணாமுல் காங்கிரஸ் இடையே தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை சுமூகமாக முடியவில்லை என்றால் இரண்டு கட்சிகளும் அங்கே எதிர்த்து போட்டியிடும் சூழ்நிலை உருவாகும்.
மகாராஷ்டிரா மாநிலத்தில் மொத்தம் 48 தொகுதிகள் உள்ளன. உத்தவ் தாக்கரேயின் சிவசேனா 22 இடங்களில் போட்டியிடுவதாக தெரிவித்தது. இதனால் காங்கிரஸ் கட்சி தேசியவாத காங்கிரஸ், சிவசேனா கட்சிகளை அழைத்து பேச்சுவார்த்தை நடத்தியது.