search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    கோவில்களில் தூய்மை இயக்கத்தில் ஈடுபட்ட திரிபுரா முதல்வர்
    X

    கோவில்களில் தூய்மை இயக்கத்தில் ஈடுபட்ட திரிபுரா முதல்வர்

    • அயோத்தி ராமர் கோவில் திறப்பு விழாவை முன்னிட்டு, ஒவ்வொரு கோவிலிலும் தூய்மை இயக்கத்தை தொடங்க பிரதமர் மோடி வலியுறுத்தினார்.
    • தனது தொகுதியில் உள்ள கோவில்களில் தூய்மை பணியில் ஈடுபட்டார் திரிபுரா முதல்வர்

    அயோத்தியில் நடைபெற உள்ள ஸ்ரீராமர் கோவில் கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு, நாடு முழுவதும் உள்ள கோவில்களில் தூய்மை இயக்கம் மேற்கொள்ள பிரதமர் மோடி வலியுறுத்தி இருந்தார்.

    அதனை தொடர்ந்து, திரிபுரா முதல்வர் மாணிக் சாஹி, தனது தொகுதியான போர்டோவாலியில் உள்ள பல்வேறு கோவில்களில் இன்று தூய்மை இயக்கத்தை தொடங்கினார். அத்துடன் முதல்வரும் இதில் பங்கெடுத்து கோவில் சுற்றுவட்டார பகுதியை துடைப்பம் கொண்டு சுத்தம் செய்தார்.

    பின்னர் செய்தியாளர்களிடம் முதல்வர் கூறியதாவது, "அயோத்தி ஸ்ரீராமர் கோவில் திறப்பு விழாவை முன்னிட்டு, ஒவ்வொரு கோவிலிலும் தூய்மை இயக்கத்தை தொடங்க பிரதமர் மோடி வலியுறுத்தினார். எனவே பாஜக தொண்டர்கள் அனைவரும் கை கோர்த்து கோவில்களை தூய்மை செய்யும் பணியில் ஈடுபட்டு வருகிறோம். திரிபுராவின் ஒவ்வொரு தொகுதியிலும் இது போன்ற தூய்மை இயக்கம் நடந்து வருகிறது. கோவில்களில் தூய்மை இயக்கம் ஒரு தெய்வீக உணர்வு" என்றும் மாணிக் தெரிவித்தார்.

    முன்னதாக மகாராஷ்டிராவின் நாசிக்கில் உள்ள கலராம் கோவில் வளாகத்தை பிரதமர் மோடி சுத்தம் செய்தது குறிப்பிடதக்கது. துடைப்பம் மற்றும் வாளியுடன் பிரதமர் மோடி கோவில் வளாகத்தை சுத்தம் செய்யும் காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலானது.

    Next Story
    ×