search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    ஆண்ட்ராய்டு போனை விட ஐபோனில் ஊபர் கட்டணம் அதிகமா? - வைரலாகும் ஸ்க்ரீன்ஷாட்
    X

    ஆண்ட்ராய்டு போனை விட ஐபோனில் ஊபர் கட்டணம் அதிகமா? - வைரலாகும் ஸ்க்ரீன்ஷாட்

    • ஒரே பயணத்திற்கு ஐபோனில் காட்டும் கட்டணத்தை விட ஆண்ட்ராய்ட் போனில் ரூ.52 அதிகமாக காட்டுவதாக புகார்.
    • ஊபரில் 2 தொலைபேசியில் இருந்து வெவ்வேறு கட்டணங்கள் காட்டும் ஸ்க்ரீன்ஷாட்டை ஒருவர் பகிர்ந்துள்ளார்.

    ஓலா, ஊபர், ராபிடோ உள்ளிட்ட வாடகை வாகன செயலிகளை பயன்படுத்தி பலரும் தற்போது பயணம் செய்து வருகின்றனர்.

    இந்நிலையில், ஐபோன் மற்றும் ஆண்ட்ராய்டு போன்களில் உள்ள ஊபர் செயலியில் ஒரே பயணத்திற்கு இருந்து புக்கிங் செய்தபோது வெவ்வேறு கட்டணங்கள் காட்டுவதாக எக்ஸ் பக்கத்தில் சுதிர் என்ற பயனர் ஒருவர் குற்றம் சாட்டியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    அவரது பதிவில், "ஒரே பயணத்திற்கு எனது மகளின் ஆண்ட்ராய்ட் போனில் உள்ள ஊபர் செயலியில் கட்டணம் ரூ. 290.79 ஆகவும், என்னுடைய ஐபோனில், கட்டணம் ரூ.342.47 ஆகவும் காட்டுகிறது. அதனால் எனது மகளிடம் தான் பெரும்பாலும் ஊபர் புக் செய்ய சொல்வேன். உங்களுக்கும் இது நடக்கிறதா?" என்று பதிவிட்டுள்ளார்.

    அந்த பதிவில், "ஊபர் செயலியில் 2 தொலைபேசியில் இருந்து வெவ்வேறு கட்டணங்கள் காட்டும்" ஸ்க்ரீன்ஷாட்டை பகிர்ந்துள்ளார்.

    இவரது குற்றச்சாட்டிற்கு ஊபர் பதில் அளித்துள்ளது. அந்த பதிவில், "இந்த இரண்டு சவாரிகளிலும் உள்ள பல வேறுபாடுகள் விலைகளில் மாற்றத்தை ஏற்படுத்துகின்றன. இதில், பிக்-அப் பாயிண்ட், வாடிக்கையாளரின் இடத்திற்கு வரும் நேரம் மற்றும் டிராப்-ஆப் பாயின்ட் மாறுபடுகிறது. அதற்கேற்ப கட்டணங்கள் மாறுபடுகிறது. செல்போன்களின் அடிப்படையில் பயண விலைகளை ஊபர் மாற்றியமைப்பதில்லை" என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    Next Story
    ×