search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    வேட்புமனுவை திரும்பப்பெற மறுத்த 5 எதிர்ப்பு தலைவர்களை கட்சியில் இருந்து அதிரடியாக நீக்கிய உத்தவ் தாக்கரே
    X

    வேட்புமனுவை திரும்பப்பெற மறுத்த 5 எதிர்ப்பு தலைவர்களை கட்சியில் இருந்து அதிரடியாக நீக்கிய உத்தவ் தாக்கரே

    • சாதகமான தொகுதிகளை கூட்டணிக்கு ஒதுக்கியதால் தனித்து வேட்புமனு தாக்கல்.
    • வேட்புமனுவை திரும்பப்பெற மறுப்பு தெரிவித்ததால் கட்சியில் இருந்து நீக்கம்.

    மகாராஷ்டிரா மாநிலத்தில் 288 தொகுதிகளுக்கும் ஒரே நேரத்தில் தேர்தல் நடைபெற இருக்கிறது. மகா விகாஸ் அகாடி கூட்டணியில் உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனா, காங்கிரஸ், சரத் பவார் தலைமையிலான தேசியவாத காங்கிரஸ் கட்சிகள் உள்ளன.

    இந்த மூன்று கட்சிகளுக்கும் இடையில் தொகுதி பங்கீடு நடைபெற்றது. அப்போது மூன்று கட்சிகளில் உள்ள தலைவர்களில் சிலர் கூட்டணி கட்சிகளுக்கு ஒதுக்கிய தொகுதியில் மனுதாக்கல் செய்தனர்.

    இது கூட்டணி கட்சிக்குள் குழப்பதை ஏற்படுத்தியது. என்றபோதிலும் இவைகள் அனைத்தும் பேசி தீர்த்துக் கொள்ளப்படும் எனக் கூறினர்.

    கடந்த சில நாட்களாக உத்தவ் தாக்கரே, சரத்பவார் மற்றும் காங்கிரஸ் கட்சி தலைவர்கள் அவர்களுடைய கட்சியில் எதிர்த்து மனுதாக்கல் செய்த தலைவர்களிடையே பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் பல தலைவர்கள் வேட்புமனுவை திரும்பப் பெற சம்மதித்தனர்.

    ஆனால், சில எதிர்ப்பு தலைவர்கள் வேட்பு மனுவை திரும்பப் பெற மறுத்துவிட்டனர். அப்படி திரும்பப் பெற மறுப்பு தெரிவித்த ஐந்து தலைவர்களை உத்தவ் தாக்கரே கட்சியில் இருந்து விலக்கியளளார். பிவாண்டி கிழக்கு எம்.எல்.ஏ. ரூபேஷ் மத்ரே, விஷ்வாஸ் நந்தேகர், சந்திரகாந்த் குகுல், சஞ்சய் அவாரி, பிரசாத் தாக்கரே ஆகிய தலைவர்களை நீக்கியுள்ளார்.

    Next Story
    ×