search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    இலவச கல்வி, தாராவி மறுசீரமைப்பு திட்டம் ரத்து: உத்தவ் தாக்கரே கட்சி தேர்தல் வாக்குறுதி
    X

    இலவச கல்வி, தாராவி மறுசீரமைப்பு திட்டம் ரத்து: உத்தவ் தாக்கரே கட்சி தேர்தல் வாக்குறுதி

    • மகா விகாஸ் அகாடி ஆட்சிக்கு வந்தால் மாணவர்களுக்கும் இலவச கல்வி.
    • அத்தியாவசிய பொருட்களின் விலைகள் நிலையாக இருப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும்.

    மகாராஷ்டிரா மாநிலத்தில் வருகிற 20-ந்தேதி ஒரே கட்டமாக 288 தொகுதிகளுக்கு தேர்தல் நடைபெற இருக்கிறது. இந்த நிலையில் உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனா (UBT) கட்சி தேர்தல் அறிக்கை வெளியிட்டுள்ளது.

    தேர்தல் அறிக்கையை உத்தவ் தாக்கரே இன்று வெளியிட்டார். இந்த தேர்தல் அறிக்கையில் கூறப்பட்டுள்ள வாக்குறுதிகள் மகா விகாஸ் அகாடியின் ஒட்டுமொத்த வாக்குறுதிகளின் ஒரு பகுதியாகும். ஆனால், சில கருத்துகள் சிறப்பு கவனம் பெறக்கூடியவை என உத்தவ் தாக்கரே தெரிவித்துள்ளார்.

    மகாராஷ்டிரா மாநிலத்தில் மாணவிகளுக்கு இலவச கல்வி பெறும் வசதி உள்ளது. மகா விகாஸ் அகாடி ஆட்சிக்கு வந்தால் மாணவர்களுக்கும் இலவச கல்வி வழங்கப்படும். அத்தியாவசிய பொருட்களின் விலைகள் நிலையாக இருப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும். தாராவி மறுசீரமைப்பு திட்டம் கைவிடப்படும் போன்ற வாக்குறுதிகள் தேர்தல் அறிக்கையில் இடம் பெற்றுள்ளன.

    மகாராஷ்டிரா தேர்தலில் காங்கிரஸ், சிவசேனா (உத்தவ் தாக்கரே), தேசியவாத காங்கிரஸ் (சரத் பவார்) ஆகிய கட்சிகள் மகா விகாஸ் அகாடி என்ற பெயரில் கூட்டணி அமைத்துள்ளனர். இந்த கூட்டணி ஒருங்கிணைந்த தேர்தல் அறிக்கையை விரைவில் வெளியிட இருக்கிறது.

    Next Story
    ×