search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    காசியில் உள்ள மகாகவி பாரதியார் இல்லத்தை பார்வையிட்ட மத்திய மந்திரி
    X

    பாரதி சிலைக்கு மந்திரி தர்மேந்திர பிரதான் மரியாதை

    காசியில் உள்ள மகாகவி பாரதியார் இல்லத்தை பார்வையிட்ட மத்திய மந்திரி

    • தமிழுக்கு மகாகவி பாரதியார் ஆற்றிய பணிகள் குறித்து கேட்டறிந்தார்.
    • வாரணாசியில் காசி–தமிழ் சங்கமம் நிகழ்ச்சி 16ந் தேதி முதல் நடைபெறுகிறது.

    காசிக்கும், தமிழகத்துக்கும் இடையே இருந்த கலாச்சாரம் மற்றும் பாரம்பரிய உறவுகள் குறித்து இன்றைய இளம் தலைமுறையினருக்கு எடுத்துரைக்கும் வகையில் உத்தரப் பிரதேச மாநிலம் வாரணாசியில் ஒரு மாத காலம் காசி – தமிழ் சங்கமம் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    இந்த நிகழ்ச்சியை பிரதமர் மோடி நாளை முறைப்படி தொடங்கி வைக்கிறார். மத்திய அரசின் கலாச்சாரத்துறை சார்பில் நடத்தப்பட்டு வரும் இந்த விழாவில் பனாரஸ் பல்கலைக்கழகமும், சென்னை ஐஐடியும் இணைந்து பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடுகள் செய்துள்ளன.

    பிரதமர் வருகையை முன்னிட்டு வாரணாசியில் செய்யப்பட்டுள்ள பாதுகாப்பு ஏற்பாடுகளை மத்திய கல்வி மந்திரி தர்மேந்திர பிரதான் இன்று நேரில் ஆய்வு செய்தார். பின்னர் கங்கை நதி அனுமன் படித்துறையை ஒட்டி அமைந்துள்ள மகாகவி பாரதியாரின் இல்லத்திற்கு சென்று அவர் பார்வையிட்டார். அங்குள்ள பாரதியாரின் சிலைக்கு மத்திய மந்திரி மரியாதை செலுத்தினார்.


    பின்னர் பாரதியாரின் 96 வயது மருமகன் கே.வி.கிருஷ்ணனை சந்தித்து பாரதியாரின் நினைவுகள் குறித்து அவர் கலந்துரையாடினார். அப்போது பாரதியாரின் உறவினர்கள் உடன் இருந்தனர். தமிழுக்கு மகாகவி பாரதியார் ஆற்றிய அரும்பெரும் பணிகள் குறித்து மத்திய மந்திரி கேட்டறிந்ததாக மத்திய அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    Next Story
    ×