என் மலர்
இந்தியா

போதுமான மக்கள் ஆங்கிலம் பேசாததுதான் தமிழ்நாட்டின் பிரச்சனை: மத்திய அமைச்சர் ராம்தாஸ் அத்வாலே
- இந்தி நமது தேசிய மொழி. ஏனென்றால் இந்திய அதிக அளவு பேசும் மக்களை கொண்டுள்ளோம்.
- தமிழ்நாடு மற்றும் கேரளா ஆகிய இரண்டு மாநிலங்களில் மட்டும்தான் போதுமான மக்கள் இந்தி பேசவில்லை.
மத்திய கல்விக் கொள்கையை ஏற்றால்தான் தமிழக கல்வித்துறைக்கு நிதி விடுவிக்கப்படும் என மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் தெரிவித்தது தமிழகத்தில் பெரும் எதிர்ப்பு அலையை ஏற்படுத்தியுள்ளது.
தமிழகம் எப்போதும் இரு மொழிக் கொள்கையைத்தான் பின்பற்றும். ஒருபோதும் இந்தி திணிப்பை ஏற்றுக்கொள்ளாது என தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் மற்றும் பல்வேறு கட்சித் தலைவர்கள் திட்டவட்டமாக தெரிவித்து வருகிறார்கள்.
அதேவேளையில் இந்தியை திணிக்கவில்லை. இந்தி அல்லது வேறு ஏதாவது ஒரு மொழியை 3-வது மொழியாக கற்றுக்கொள்ளதான் சொல்கிறோம் என பாஜக தலைவர்கள் தெரிவித்து வருகின்றனர்.
இந்த நிலையில் ஜம்மு-காஷ்மீரில் மத்திய அமைச்சர் ராம்தாஸ் அத்வாலே கூறியதாவது:-
இந்தி நமது தேசிய மொழி. ஏனென்றால் இந்திய அதிக அளவு பேசும் மக்களை கொண்டுள்ளோம். தமிழ்நாடு மற்றும் கேரளா ஆகிய இரண்டு மாநிலங்களில் மட்டும்தான் போதுமான மக்கள் இந்தி பேசவில்லை. போதுமான மக்கள் ஆங்கிலம் பேசாததுதான் தமிழ்நாட்டின் பிரச்சனை.
நீங்கள் இந்திய பேச விரும்பவில்லை என்றால், இந்திய பேச வேண்டாம். ஆனால் இந்தி மொழியை கடுமையாக எதிர்க்க வேண்டாம் என தமிழக மக்களுக்கு வேண்டுகோள் வைக்கிறேன்.
இவ்வாறு ராம்தாஸ் அத்வாலே தெரிவித்துள்ளார்.






