என் மலர்![tooltip icon](/images/info-tooltip.svg)
இந்தியா
![6 மாதங்களில் 200-க்கும் மேற்பட்ட நகரங்களில் 5ஜி சேவை- மத்திய மந்திரி தகவல் 6 மாதங்களில் 200-க்கும் மேற்பட்ட நகரங்களில் 5ஜி சேவை- மத்திய மந்திரி தகவல்](https://media.maalaimalar.com/h-upload/2022/10/01/1770658-aswini.jpg)
X
அஸ்வினி வைஷ்னவ், 5ஜி சேவை
6 மாதங்களில் 200-க்கும் மேற்பட்ட நகரங்களில் 5ஜி சேவை- மத்திய மந்திரி தகவல்
By
மாலை மலர்1 Oct 2022 3:25 PM IST
![மாலை மலர் மாலை மலர்](/images/authorplaceholder.jpg?type=1&v=2)
- அடுத்த ஆகஸ்ட் 15-ந் தேதி முதல் பி.எஸ்.என்.எல். 5ஜி சேவை வழங்கப்படும்.
- 2 ஆண்டுகளில் 90 சதவீத இடங்களில் 5ஜி சேவை வழங்க முயற்சி.
டெல்லி பிரகதி மைதானத்தில் நடந்த 6-வது இந்திய மொபைல் காங்கிரஸ் மாநாட்டை தொடங்கி வைத்த பிரதமர் மோடி ஐந்தாம் தலைமுறை அலைக்கற்றையான 5ஜி சேவையை தொடங்கி வைத்தார்.இந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய மத்திய தகவல் தொழில்நுட்ப அமைச்சர் அஸ்வினி வைஷ்னவ், இன்னும் 6 மாதங்களில் நாட்டில் உள்ள 200-க்கும் மேற்பட்ட நகரங்களில் 5ஜி சேவை வழங்கப்படும் என்றார்.
அடுத்த 2 ஆண்டுகளில் நாடு முழுவதும் 90 சதவீத இடங்களில் 5ஜி சேவை வழங்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்றும் அவர் குறிப்பிட்டார். அடுத்த ஆண்டு ஆகஸ்ட் 15-ந் தேதி முதல் பிஎஸ்என்எல் மூலம் 5ஜி சேவை வழங்கப்படும் என்றும், குறைந்த விலையில் 5ஜி சேவை கிடைக்கும் என்றும் அவர் தெரிவித்தார்.
Next Story
×
X