என் மலர்![tooltip icon](/images/info-tooltip.svg)
இந்தியா
![மனைவியுடன் இயற்கைக்கு மாறான உடலுறவு குற்றம் இல்லை- சத்தீஸ்கர் ஐகோர்ட் தீர்ப்பு மனைவியுடன் இயற்கைக்கு மாறான உடலுறவு குற்றம் இல்லை- சத்தீஸ்கர் ஐகோர்ட் தீர்ப்பு](https://media.maalaimalar.com/h-upload/2025/02/12/9221479-un-natural-sex.webp)
மனைவியுடன் இயற்கைக்கு மாறான உடலுறவு குற்றம் இல்லை- சத்தீஸ்கர் ஐகோர்ட் தீர்ப்பு
![Maalaimalar Maalaimalar](/images/authorplaceholder.jpg)
- சத்தீஸ்கரில் இயற்கைக்கு மாறான உடலுறவு கொண்டதால் மனைவி உடல் நலம் பாதிக்கப்பட்டார்.
- ஆஸ்பத்திரியில் சிகிச்சை பலனின்றி மனைவி உயிரிழந்தார்.
சத்தீஸ்கர் மாநிலம் பஸ்தார் மாவட்டத்தை சேர்ந்த ஒருவர் கடந்த 2017-ம் ஆண்டு அவருடைய மனைவியுடன் இயற்கைக்கு மாறான உடலுறவு கொண்டதாக கூறப்படுகிறது.
இதில் அவருடைய மனைவி கடுமையான உடல் நலம் பாதிக்கப்பட்டார். ஆஸ்பத்திரியில் சிகிச்சை பலனின்றி இறந்தார்.
அவர் அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில் இயற்கைக்கு மாறான உடலுறவு கொண்டதாக அவருடைய கணவரை போலீசார் கைது செய்தனர்.
இந்த வழக்கில் ஜக்தல்பூர் கூடுதல் அமர்வு நீதிமன்றம் அந்த நபருக்கு 10 ஆண்டு கடுங்காவல் சிறை தண்டனை விதித்தது.
இது குறித்து கணவன் சத்தீஸ்கர் ஐகோர்ட்டில் மேல்முறையீடு செய்தார். இந்த வழக்கின் விசாரணை முடிந்து நேற்று நீதிபதி தீர்ப்பு வழங்கினார்.
அதில் 2013-ம் ஆண்டு ஐ.பி.சி. பிரிவு 375-ல் செய்யப்பட்ட திருத்தத்தின்படி குற்றம் சாட்டப்பட்டவரின் செயலை குற்றமாக கருத முடியாது. மனைவி குறிப்பிட்ட வயதுக்கு மேல் இருக்கும் போது கணவன் செய்யும் எந்த ஒரு பாலியல் செயலும் பாலியல் வன்கொடுமையின் கீழ் வராது. சம்மதம் இனி முக்கியமில்லை.
மனைவியுடன் இயற்கைக்கு மாறான உடலுறவு குற்றமில்லை.இது தொடர்பாக குற்றம் சாட்டப்பட்டவர்களை உடனடியாக விடுவிக்க வேண்டும் என தீர்ப்பளித்தார்.