search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    யு.பி.ஐ பண பரிமாற்றம் ரூ.14,000 கோடி குறைந்தது
    X

    யு.பி.ஐ பண பரிமாற்றம் ரூ.14,000 கோடி குறைந்தது

    • மார்ச் மாதத்தில் யு.பி.ஐ பரிமாற்றம் ரூ.19.78 லட்சம் கோடியாக இருந்தது.
    • கடந்த ஏப்ரல் மாதத்தில் ரூ.19.64 லட்சம் கோடியாக குறைந்துள்ளது.

    டிஜிட்டல் யுகத்தில் ஒரு ரூபாய் முதல் லட்சங்கள் வரை எளிதாக நாம் பண பரிவர்த்தனை செய்ய முடியும். இதற்கு யுபிஐ பணப் பரிமாற்ற சேவை மிகவும் உதவியாக அமைந்துள்ளது.

    யுபிஐ சேவை மக்கள் மத்தியில் தற்போது பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி இருக்கிறது. ஒரு ரூபாய்க்கு ஒரு பொருள் வாங்கினாலும், 10 ஆயிரம் ரூபாய்க்கு மொபைல் போன் வாங்கினாலும் அனைத்திற்கும் யுபிஐ பண பரிவர்த்தனை முதன்மையாக திகழ்கிறது.




    இந்தியாவில் தற்போது டிஜிட்டல் முறை மூலம் பணம் செலுத்துவது புதிய உச்சம் அடைந்துள்ளது, இணையத்தில் வளர்ந்து வரும் வியாபார பரிவர்த்தனைக்காக இதன அதிக அளவில் மக்கள் பயன் படுத்துகிறார்கள்.

    UPI என்பது இந்தியாவின் மொபைல் அடிப்படையிலான வேகமான கட்டண முறையாகும். இது வாடிக்கையாளர் உருவாக்கிய விர்ச்சுவல் பேமெண்ட் முகவரியை (VPA) பயன்படுத்தி 24 மணிநேரமும் உடனடியாக பணம் செலுத்த வாடிக்கையாளர்களுக்கு உதவுகிறது.



    இந்தியாவில் சில்லறை டிஜிட்டல் பேமெண்ட்டுகளுக்கு UPI பேமெண்ட் முறை தற்போது மிகவும் பிரபலமாகி இருக்கிறது.

    இந்நிலையில் யு.பி.ஐ தொழில் நுட்பத்தை பயன்படுத்தி, ஆன்லைன் மூலம் செய்யப்படும் பணப் பரிமாற்றம் கடந்த ஏப்ரல் மாதத்தில் ரூ.14,000 கோடி அளவுக்குக் குறைந்துள்ளது.




    கடந்த மார்ச் மாதத்தில் யு.பி.ஐ மூலமான பண பரிமாற்றம் ரூ.19.78 லட்சம் கோடியாக இருந்தது. ஆனால், கடந்த ஏப்ரல் மாதத்தில் ரூ.19.64 லட்சம் கோடியாக குறைந்துள்ளது.

    மேலும் யு.பி.ஐ மூலம் பணம் அனுப்புவது தற்போது குறைந்தது ஏன் என்பது குறித்து ஆய்வு செய்யப்பட்டு வருகிறது.

    Next Story
    ×