என் மலர்![tooltip icon](/images/info-tooltip.svg)
இந்தியா
![அதிகரிக்கும் பக்தர்கள் எதிரொலி: சார் தாம் யாத்திரைக்கான விஐபி தரிசன தடை நீடிப்பு அதிகரிக்கும் பக்தர்கள் எதிரொலி: சார் தாம் யாத்திரைக்கான விஐபி தரிசன தடை நீடிப்பு](https://media.maalaimalar.com/h-upload/2024/05/17/2239906-yatra.webp)
அதிகரிக்கும் பக்தர்கள் எதிரொலி: சார் தாம் யாத்திரைக்கான விஐபி தரிசன தடை நீடிப்பு
![மாலை மலர் மாலை மலர்](/images/authorplaceholder.jpg?type=1&v=2)
- சார் தாம் யாத்திரை செல்ல கட்டாயம் முன்பதிவு செய்திருக்க வேண்டும்.
- கோவிலில் இருந்து 50 மீட்டர் சுற்றளவில் வீடியோ, ரீல்ஸ்கள் எடுக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
டேராடூன்:
இந்துக்களின் நான்கு புனித தலங்களான பத்ரிநாத், கேதர்நாத், கங்கோத்ரி மற்றும் யமுனோத்ரி ஆகிய தலங்களுக்குச் செல்லும் யாத்திரையானது சார் தாம் யாத்திரை என அழைக்கப்படுகிறது.
இந்த ஆண்டிற்கான சார் தாம் யாத்திரை பயணம் கடந்த 10-ம் தேதி தொடங்கியது. யாத்திரை தொடங்கிய முதல் நாளில் கேதர்நாத் கோவிலில் சுமார் 29,000 பக்தர்கள் சாமி தரிசனம் செய்ததாக உத்தரகாண்ட் அரசு தெரிவித்தது.
தொடர்ந்து நாடு முழுவதிலும் இருந்து தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சார் தாம் புனித யாத்திரை மேற்கொள்வதற்காக உத்தரகாண்ட் மாநிலத்திற்கு வருகை தருகின்றனர்.
இதற்கிடையே, சார் தாம் யாத்திரை செல்வதற்கு கட்டாயமாக முன்பதிவு செய்திருக்க வேண்டும் என உத்தரகாண்ட் மாநில அரசு அறிவித்துள்ளது.
இந்நிலையில், சார் தாம் யாத்திரைக்கான பக்தர்கள் கூட்டம் அதிகரித்து வருவதால் வரும் 31-ம் தேதி வரை விஐபி தரிசனத்துக்கு மாநில அரசு தடையை நீட்டித்துள்ளது.
இதுதொடர்பாக உத்தரகாண்ட் மாநில தலைமைச் செயலாளர் ராதா ரடோரி கூறுகையில், யாத்திரை செல்லும் பாதைகளில் போலீசார் சோதனைச் சாவடிகள் அமைத்து சோதனை மேற்கொள்வார்கள். புனித தலங்களில் இருந்து 50 மீட்டர் சுற்றளவில் வீடியோ மற்றும் ரீல்ஸ்கள் எடுக்க தடை விதிக்கப்பட்டுள்ளது என தெரிவித்தார்.