என் மலர்tooltip icon

    இந்தியா

    வைகுண்ட ஏகாதசியையொட்டி திருப்பதியில் கூடுதலாக 3.50 லட்சம் லட்டுகள் தயாரிப்பு
    X

    வைகுண்ட ஏகாதசியையொட்டி திருப்பதியில் கூடுதலாக 3.50 லட்சம் லட்டுகள் தயாரிப்பு

    • பக்தர்களின் கூட்டத்தால் டிசம்பர் மாதம் 29-ம் தேதி முதல் ஜனவரி மாதம் 3-ம் தேதி வரை திருமலையில் அறைகள் முன்பதிவு ரத்து செய்யப்படுகிறது.
    • கொரோனா பரவலை தடுக்கும் விதத்தில் பக்தர்கள் கட்டாயம் முகக்கவசம் அணிந்து வர வேண்டும்.

    திருப்பதி:

    வைகுண்ட ஏகாதசி ஏற்பாடுகள் குறித்து திருமலையில் உள்ள அன்னமய்யா பவனில் திருப்பதி தேவஸ்தான அறங்காவலர் குழு தலைவர் ஒய்.வி. சுப்பாரெட்டி தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

    இதனை தொடர்ந்து சுப்பாரெட்டி நிருபர்களிடம் கூறியதாவது:-

    வைகுண்ட ஏகாதசியையொட்டி ஜனவரி 2-ம் தேதி முதல் 11-ம் தேதி வரை திருப்பதியில் 8 இடங்களிலும், திருமலையில் ஒரு இடத்திலும் இலவச தரிசன டோக்கன்கள் வழங்கப்படும்.

    1-ம் தேதி மதியம் 2 மணியில் இருந்து இலவச தரிசன டோக்கன்கள் விநியோகம் செய்யப்படும். தொடர்ந்து 4.50 லட்சம் டோக்கன்கள் பக்தர்களுக்கு ஆதார் அட்டை மூலம் வழங்கப்படும்.

    இலவச டோக்கன்கள் பெற்றுக்கொண்ட பக்தர்கள், அதில் குறிப்பிட்டுள்ள தேதி, நேரத்தின் அடிப்படையில் ஒரு மணி நேரத்துக்கு முன்பு திருமலைக்கு வந்தால் போதுமானது.

    டோக்கன் பெற்றவர்கள், திருமலையில் உள்ள ஸ்ரீ கிருஷ்ணா தங்கும் விடுதி அருகே ஆஜராக வேண்டும். பக்தர்களின் கூட்டத்தால் டிசம்பர் மாதம் 29-ம் தேதி முதல் ஜனவரி மாதம் 3-ம் தேதி வரை திருமலையில் அறைகள் முன்பதிவு ரத்து செய்யப்படுகிறது.

    வைகுண்ட ஏகாதசியன்று காலை 9 மணி முதல் 11 மணி வரை தங்க ரத ஊர்வலம் 4 மாட வீதிகளிலும் நடைபெறும், மறுநாள் 3-ம் தேதி துவாதசியை முன்னிட்டு, காலை சக்கர ஸ்நான நிகழ்ச்சிகள் நடைபெறும். பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருக்கும் என்பதால் 3.50 லட்சம் லட்டு பிரசாதங்கள் நிலுவையில் வைக்கப்பட்டுள்ளன. ஆங்காங்கே மருத்துவ முகாம்கள் ஏற்பாடு செய்யப்படும்.

    பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. 24 மணி நேரமும் 2 மலைப்பாதைகளும் திறந்தே இருக்கும்.

    கொரோனா பரவலை தடுக்கும் விதத்தில் பக்தர்கள் கட்டாயம் முகக்கவசம் அணிந்து வர வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    Next Story
    ×