search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    தேசியக்கொடிக்காக ஏழைகளின் உணவை பறிப்பது வெட்கக்கேடு: வருண் காந்தி காட்டம்
    X

    தேசியக்கொடிக்காக ஏழைகளின் உணவை பறிப்பது வெட்கக்கேடு: வருண் காந்தி காட்டம்

    • வீடுகள்தோறும் தேசியக்கொடி ஏற்றுமாறு பிரதமர் மோடி அழைப்பு விடுத்து உள்ளார்.
    • ரேஷன் அட்டை தாரர்கள் தேசியக்கொடி வாங்க வற்புறுத்தப்படுகின்றனர்.

    புதுடெல்லி :

    சுதந்திர தின 75-வது ஆண்டு கொண்டாட்டத்தையொட்டி வீடுகள்தோறும் 13 முதல் 15-ந்தேதி வரை தேசியக்கொடி ஏற்றுமாறு பிரதமர் மோடி அழைப்பு விடுத்து உள்ளார். இதையொட்டி நாடு முழுவதும் தேசியக்கொடி விற்பனை அதிகரித்து உள்ளது.

    அதேநேரம் தேசியக்கொடி வாங்காதவர்களுக்கு பல இடங்களில் ரேஷன் பொருட்கள் மறுக்கப்படுவதாக பா.ஜனதா எம்.பி. வருண் காந்தி குற்றம் சாட்டியுள்ளார். இது தொடர்பாக வீடியோ ஒன்றை தனது டுவிட்டர் தளத்தில் அவர் பகிர்ந்துள்ளார்.

    அதில் ரூ.20 கொடுத்து தேசியக்கொடி வாங்க வற்புறுத்துவதாக சில ரேஷன் அட்டைதாரர்கள் குற்றம் சாட்டுவது பதிவாகி இருக்கிறது.

    இது குறித்து அவர், 'சுதந்திரம் பெற்ற 75-வது ஆண்டு கொண்டாட்டங்கள் ஏழைகளுக்கு ஒரு சுமையாக மாறினால், அது துரதிர்ஷ்டவசமானது. ரேஷன் அட்டை தாரர்கள் தேசியக்கொடி வாங்க வற்புறுத்தப்படுகின்றனர். வாங்காதவர்களுக்கு ரேஷன் உணவுப்பொருட்கள் மறுக்கப்படுகிறது. ஒவ்வொரு இந்தியனின் இதயத்திலும் வாழும் தேசியக்கொடிக்காக ஏழைகளின் உணவை பறித்து எடுப்பது வெட்கக்கேடானது' என்று குறிப்பிட்டு இருந்தார்.

    Next Story
    ×