search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    இலவசங்களுக்கு எதிராக கருத்து பிரதமர் மோடிக்கு வருண் காந்தி பதிலடி
    X

    இலவசங்களுக்கு எதிராக கருத்து பிரதமர் மோடிக்கு வருண் காந்தி பதிலடி

    • ஊழல் தொழில் அதிபர்களின் ரூ.10 லட்சம் கோடி கடன்கள் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.
    • வாங்கிய கடனை செலுத்தத் தவறிய 10 நிறுவனங்கள் பட்டியலை வெளியிட்டுள்ளார்.

    புதுடெல்லி

    ஓட்டுகளை அள்ளுவதற்காக அரசியல் கட்சிகள் தேர்தலின்போது இலவசங்களை தருவதாக கூறுவதாக பிரதமர் மோடி சமீபத்தில் சாடினார்.

    இதற்கு பா.ஜ.க. எம்.பி. வருண் காந்தி பதிலடி தந்துள்ளார்.

    அவர் டுவிட்டரில் இந்தியில் நேற்று வெளியிட்ட பதிவில், கடந்த 5 ஆண்டுகளில் ஊழல் தொழில் அதிபர்கள் ரூ.10 லட்சம் கோடி கடன்களை தள்ளுபடி செய்யப்பட்டிருப்பதை சுட்டிக்காட்டி உள்ளார். அத்துடன் வாங்கிய கடனை செலுத்தத் தவறிய 10 நிறுவனங்கள் பட்டியலை நாடாளுமன்றத்தில் வெளியிட்டதை அவர் பகிர்ந்துள்ளார். இந்த நிறுவனங்களில் இரண்டில் மெகுல்சோக்சி, ரிஷி அகர்வால் உள்ளிட்ட தொழில் அதிபர்களுக்கு தொடர்பு இருப்பது குறிப்பிடத்தக்கது.

    இதையொட்டி வருண் காந்தி குறிப்பிடுகையில், " ஏழைகளுக்கு 5 கிலோ இலவச உணவு தானியங்களை வழங்கி விட்டு நாடாளுமன்றம் நன்றியை எதிர்பார்க்கிறது. ஆனால் 5 ஆண்டுகளில் ஊழல் தொழில் அதிபர்களுக்கு வழங்கிய ரூ.10 லட்சம் கோடி வாராக்கடன்களை தள்ளுபடி செய்திருப்பதாக அதே நாடாளுமன்றத்தில் கூறப்பட்டுள்ளது. அரசின் கஜானாவில் முதல் உரிமை யாருக்கு? "என கேள்வி எழுப்பி உள்ளார்.

    Next Story
    ×