search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    VIDEO: பீகார் அரசுத் தேர்வில் வினாத்தாளை தூக்கி ஓடிய மாணவர்கள் - கிழித்தெறிந்து ரகளை
    X

    VIDEO: பீகார் அரசுத் தேர்வில் வினாத்தாளை தூக்கி ஓடிய மாணவர்கள் - கிழித்தெறிந்து ரகளை

    • மாணவர்கள் போராட்டம் நடத்தியபோது மாவட்ட மாஜிதிரெட் மாணவர் ஒருவரை சரமாரிய தாக்கிய வீடியோ வைரலாகியது.
    • ஆசிரியர்களை மீறி வினாத்தாளின் சீல் வைக்கப்பட்ட பெட்டியை சோதனை செய்து அதிலுள்ள வினாத்தாள்களை எடுத்து கிழித்தெறிந்துள்ளனர்.

    குரூப் ஏ மற்றும் பி பதவிகளில் ஆட்களை சேர்ப்பதற்கான பிபிஎஸ்சியின் [BPSC] ஒருங்கிணைந்த முதன்மை[Prelims] போட்டித் தேர்வு [BPSC] நேற்று [வெள்ளிக்கிழமை] நடைபெற்றது. மாநிலத்தில் 945 மையங்களில் சுமார் 5 லட்சம் பேர் தேர்வெழுதினர்.

    இருப்பினும், தேர்வின் வினாத்தாள் கசிந்ததாகவும், வினாத்தாள் வினியோகத்தில் தாமதித்துத் தேர்வு மையத்தில் முறைகேடு நடந்ததாகவும் குற்றம்சாட்டி தேர்வு மையங்களின் வெளியே மாணவர்கள் போராட்டம் நடத்தினர். பாட்னாவில் உள்ள தேர்வு மையத்திற்கு வெளியே மாணவர்கள் போராட்டம் நடத்தியபோது மாவட்ட மாஜிதிரெட் மாணவர் ஒருவரை சரமாரிய தாக்கிய வீடியோ வைரலாகியது.

    தேர்வு முறைகேடு தொடர்பாக எதிர்க்கட்சிகளும் கேள்வி எழுப்பியுள்ள நிலையில் எந்த முறைகேடும் நடக்கவில்லை என்றும் போராட்டம் சதிவேலை என்று அம்மாநில அரசு தெரிவித்துள்ளது.

    இந்நிலையில் பாட்னா தேர்வு மையத்தில் வெள்ளிக்கிழமை தேர்வு நடந்துகொண்டிருந்தபோது வினாத்தாள் தருவதில் 40 முதல் 45 நிமிடங்கள் தாமதம் ஏற்பட்டதால் பொறுமையிழந்த மாணவர்கள் ஆசிரியர்களை மீறி வினாத்தாளின் சீல் வைக்கப்பட்ட பெட்டியை சோதனை செய்து அதிலுள்ள வினாத்தாள்களை எடுத்து கிழித்தெறிந்துள்ளனர்.

    பலர் வினாத்தாள்களைத் தூக்கிக்கொண்டு வெளியே ஓடிச்சென்றுள்ளனர். தங்கள் அறையில், சீல் வைக்கப்பட்ட பெட்டியை ஏன் திறக்கவில்லை என்று மாணவர்கள் ஆசிரியர்களிடம் கேள்வி எழுப்பினர்.

    சத்தம் கேட்டு மற்ற அறைகளைச் சேர்ந்த சில மாணவர்களும் வந்து கையேடுகள் மற்றும் வருகைப் பதிவேட்டை பறித்து கிழிக்கத் தொடங்கினர். இதனால், மாணவர்கள் தேர்வு மையத்திற்கு வெளியே கூடியுள்ளனர். இதுதொடர்பாக சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    இந்த குறிப்பிட்ட தேர்வு மையத்தில் தேர்வை நிறுத்த அவர்கள் முயன்றதாகும் இருப்பினும் மற்ற தேர்வு 5,674 மாணவர்களுடன் தேர்வு நடத்தி முடிக்கப்பட்டதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர். மேலும் போராட்டம் தொடர்பாக போலீஸ் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறது.

    Next Story
    ×