search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    VIDEO: நெடுஞ்சாலையில் கொழுந்து விட்டு எரிந்த தீ.. கெமிக்கல் டேங்கர் கவிழ்ந்ததால் ஏற்பட்ட விபரீதம்
    X
    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்

    VIDEO: நெடுஞ்சாலையில் கொழுந்து விட்டு எரிந்த தீ.. கெமிக்கல் டேங்கர் கவிழ்ந்ததால் ஏற்பட்ட விபரீதம்

    • இன்று அதிகாலை 5.50 மணியளவில் வந்துகொண்டிருந்த டிரக் பக்கவாட்டில் கவிழ்த்து தீப்பிடித்தது.
    • தீயணைப்புத் துறையினர் 3 மணி நேரம் போராடி தீயை கட்டுப்படுத்தினர்.

    மும்பை பூனே நெடுஞ்சாலை அருகே ரசாயணம் ஏற்றி வந்த லாரி கவிழ்ந்து தீப்பிடித்து எரித்து விபத்துகளாகியுள்ளது.

    டேங்கரில் ஸ்பிரிட் (எத்தனால்) ஏற்றப்பட்டு கோபோலியில் உள்ள மதுபான உற்பத்தி நிறுவனத்தை நோக்கி லாரி சென்று கொண்டிருந்தது. மும்பை-புனே விரைவுச்சாலையை தாண்டி கோபோலி பகுதியில் ஷில்பாடா அருகே இன்று அதிகாலை 5.50 மணியளவில் வந்துகொண்டிருந்த டிரக் பக்கவாட்டில் கவிழ்த்து தீப்பிடித்தது.

    வாகனத்திலிருந்து விலகிய டேங்கரில் தீ மளமளவென பரவியது. மேலும் எத்தனால் சாலையில் கொட்டிய நிலையில் சாலையின் சுற்றளவில் சுமார் 20-25 அடி தூரத்திற்கு தீ பரவியது.

    தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு வந்த தீயணைப்புத் துறையினர் 3 மணி நேரம் போராடி தீயை கட்டுப்படுத்தினர். விபத்து தொடர்பான வீடியோ இணையத்தில் வெளியாகி உள்ளது.

    Next Story
    ×